தன்னுடைய உடல் நிலையால் அனுபவித்த மோசமான சம்பவத்தை குறித்து பூர்ணிமா பாக்யராஜ் எமோஷனலாக அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் பூர்ணிமா பாக்கியராஜ். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இவருடைய கணவர் தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் தான். இவர் பாக்கியராஜ் உடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் படங்களில் நடித்ததன் மூலம் தான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு சாந்தனு மற்றும் சரண்யா என்று இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
பூர்ணிமா குடும்பம்:
இவர் மகன் சாந்தனு தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். பூர்ணிமா-பாக்யராஜ் தென்னிந்திய சினிமா உலகில் மிகச் சிறந்த தம்பதிகளாக விளங்கி வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு பூர்ணிமா பாக்யராஜ் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார். பின் ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து பூர்ணிமா படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
பூர்ணிமா நடிக்கும் சீரியல்கள்:
அதோடு சின்னத்திரை சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார். கடைசியாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற எங்க வீட்டு மீனாட்சி என்ற தொடரில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்து இருந்தார். மேலும், இவர் நடிப்பை தாண்டி ஜுவல்லரி, ஆடை வடிவமைப்பு போன்ற தொழில்களை செய்து கொண்டு வருகிறார். தற்போது இவர் சின்னத்திரை, வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வருகிறார்.
பூர்ணிமா பேட்டி:
இந்த நிலையில் சமீபத்தில் பூர்ணிமா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், திருமணத்திற்கு பிறகு நான் என்னுடைய தொழிலில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தேன். எனக்கு சமைக்கவே தெரியாது. அதனால இன்ட்ரஸ்ட் எடுத்து என்னால் சமையல் செய்ய முடியவில்லை. அதேபோல் நான் என்னுடைய உடல் உடல்நலத்திலும் கவனம் செலுத்தவில்லை. இதனால் சில வருடங்களுக்கு முன்பு நான் உடல் எடை கூடி குண்டாகி விட்டேன்.
உடல்நலம் குறித்து சொன்னது:
அதற்குப் பிறகுதான் நான் யோகா, நடைப்பயிற்சி என்று செய்து பழைய நிலைக்கு வந்தேன். அதேப்போல் என்னுடைய சாப்பாட்டிலும் நான் கவனம் செலுத்தாததால் தான் எனக்கு உடல் எடை அதிகமாக கூடியிருந்தது. இதனால் நான் ரொம்பவே அதிர்ச்சியாகி விட்டேன். எவ்வளவு வேலை நமக்கு இருந்தாலும் நம்முடைய உடம்பையும் கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.