ஈரமான ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்டில் தான் ஆடிக்ஷன் .! பூவே பூச்சிடவா ரேஷ்மா ஓபன் டாக்.!

0
2020
Reshma
- Advertisement -

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் கடந்த 2018 ஆம் ஆண்டின் டாப் 10 சீரியல் பட்டியலிலும் இடம்பெற்றிருந்தது.

- Advertisement -

இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ரேஷ்மா இளசுகளையும் கவர்ந்துள்ளார். கேரளாவை சேர்ந்த இவர் சென்னையில் தான் வளர்த்தார். டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரேஷ்மா, பூவே பூச்சூடவா சீரியலின் ஆடிஷன் பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,
நான் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிவிட்டு சோர்வாக அமர்ந்திருந்தேன். உடல் முழுவதும் வியர்வையில் ஈரமாக, வெறும் ட்ராக், டிசர்ட் மட்டும் தான் அணிந்திருந்தேன்.

-விளம்பரம்-

அப்போது தான் புதிதாக சீரியல் ஒன்றை ஆரம்பிக்க போவதாக பேச்சுகள் எழுந்தன. நான் டான்ஸ் ஆடிவிட்டு ஈரமான உடையில் ஆடிஷனுக்கு சென்றேன். அப்போது ஒரு குர்த்தாவை போட்டு கொண்டு வர சொன்னார்கள். அதன் பின்னர் ஒரே ஒரு வசனத்தை பேச சொன்னார்கள் அதை நான் பேசிவிட்டு பின்பு எனக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது என்று கூறியுள்ளார்.

Advertisement