‘என்ன கன்றாவி இது’ – பூவே பூச்சூடவா சீரியல் நடிகையின் கோலத்தை கண்டு கலாய்க்கும் ரசிகர்கள்.

0
1848
kiruthika

ஒரு காலத்தில் ஜீ தொலைக்காட்சி சேனல் நம்பர் என்ன என்பது கூட தொலைக்காட்சி ரசிகர்களுக்கு தெரியாது. ஆனால், சமீப காலமாக தொலைக்காட்சி ரசிகர்கள் பலரும் ஜீ தமிழ் தொழிகாட்சியின் ரசிகர்களாக மாறியுள்ளனர். அதற்கு முக்கிய காரணமே தற்போது இந்த தொலைகட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு புதிய தொடர்கள் தான்.தற்போது ஜீ தமிழ் தொலைகட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் நல்ல தொடர்களில் பல மாற்றங்களை செய்து வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சுடவா சீரியல் இந்த தொலைக்காட்சியின் வெற்றி சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.பூச்சூடவா சீரியலிலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சீரியலின் நாயகன்  தினேஷ் கோபாலசாமி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் கார்த்திக் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடித்து வரும் ரவீனா தார்;தற்போது விஜய் டிவி மௌன ராகம் 2வில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இவர் திருமுருகன் இயக்கிய  தேன் நிலவு என்னும் சீரியல் மூலம் மூலம் அறிமுகமானவர். இந்த சீரியலுக்கு பின்னர் இவர் பொன்னூஞ்சல் மற்றும் பைரவி ஆகிய சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு அடுத்த கட்டமான சூப்பர் மாம் என்னும் விளையாட்டு நிகழ்ச்சியில், தனது மகளுடன் சேர்ந்து கலந்துகொண்டார்.  இவர் சீரியல் மட்டுமில்லாமல் சென்னை 28 இரண்டாம் பாகம் மற்றும் சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படத்தில் நாயகியின் தோழியாக நடித்துள்ளார்.

ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ ‘பூவே பூச்சுடவா’ சீரியல் தான். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் வித்யாசமான கெட்டப்பில் சில புகைப்படங்களை பகிர்ந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் ‘என்ன கன்றாவி இது’ என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement