10 வருட காதலரை திருமணம் முடித்த ‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகை.

0
17296
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்துள்ளது. ஒரு காலத்தில் ஜீ தொலைக்காட்சி சேனல் நம்பர் என்ன என்பது கூட தொலைக்காட்சி ரசிகர்களுக்கு தெரியாது. ஆனால், சமீப காலமாக தொலைக்காட்சி ரசிகர்கள் பலரும் ஜீ தமிழ் தொழிகாட்சியின் ரசிகர்களாக மாறியுள்ளனர். அதற்கு முக்கிய காரணமே தற்போது இந்த தொலைகட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு புதிய தொடர்கள் தான்.

-விளம்பரம்-
 பூவே பூச்சூடவா சீரியல் நடிகை தனலட்சுமிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த சீரியலில் நடித்து வரும் தனலட்சுமி தான் சமீபத்தில் திருமணம் முடிந்துள்ளது. சீரியல் நடிகையான இவர் யாழினி என்ற தொடர் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் தாமரை என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பூவே பூச்சூடவா சீரியல் தான். இந்த சீரியலில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் தனலட்சுமி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை தனலட்சுமி தனது நீண்டநாள் காதலரை ஆன சிவா என்பவரை திருமணம் செய்து உள்ளார். நடிகை தனலட்சுமி , சிவா என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் கூட இவர்களின் காதல் நிறைவடைந்து 10 ஆண்டுகள் ஆனதை கொண்டாடி இருந்தனர்.

https://www.instagram.com/p/B-ffbVqBdTc/

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைகட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் நல்ல தொடர்களில் பல மாற்றங்களை செய்து வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சுடவா சீரியல் இந்த தொலைக்காட்சியின் வெற்றி சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. சீரியலின் நாயகன்  தினேஷ் கோபாலசாமி மாற்றப்பட்டு பின்னர் . அவருக்கு பதில் கார்த்திக் வாசு நாயகனாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement