சன் டிவிக்கு போன ராசி – ஹீரோவாக முதல் படத்தில் கமிட் ஆன அசீம், ஹீரோயின் யார் தெரியுமா ?

0
457
azeem-1
- Advertisement -

சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அஸீம். சன் டிவியில் தான் ஆங்கராக இவர் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற தெய்வம் தந்த வீடு என்ற சீரியலில் நடித்தார். அதற்குப்பிறகு பகல் நிலவு சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதனை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்தார். இப்படி இவர் நடித்த சீரியல் எல்லாம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது.

-விளம்பரம்-
Mohammed Azeem Biography, Wiki, DOB, Family, Profile, Movies list

அதிலும் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய தொடர்களில் இவருக்கு ஜோடியாக ஷிவானி நடித்ததார். அதோடு இந்த சீரியல்களில் இவர்களின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்தது. இதனால் சோசியல் மீடியாவில் இவர்களைப் பற்றி தான் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டது. இதற்குப் பின் சிவானி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது அஸிமும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் செல்லவில்லை.

- Advertisement -

அஸிம் நடிக்கும் சீரியல்:

பின் இவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு செல்வதாக சோசியல் மீடியாவில் பல தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அந்த நேரம் பார்த்து இவர் சன் டிவிக்கு சென்றுவிட்டார். தற்போது இவர் சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் தொடரான ‘பூவே உனக்காக’ சீரியலில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று போய்க் கொண்டிருக்கின்றது. அதோடு சமீபத்தில் இந்த சீரியல் பிக் பாஸ் டிஆர்பியை விட முந்தி சென்றதாக தகவல் வந்து இருந்தது.

அஸிம் நடிக்க போகும் படம்:

அதுவும் அஸிம் வந்த பிறகு தான் இது எல்லாம் நடந்ததாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டது. இந்நிலையில் இந்த சீரியலில் அஸிம்க்கு கிடைத்த பிரபலத்தின் மூலம் தற்போது இவர் வெள்ளித்திரையில் கால் தடம் பதிக்கிறார். இந்த படம் ZEE5 யில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் சூட்டிங் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் டைட்டில் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

-விளம்பரம்-

படத்தை பற்றிய தகவல்:

ஆனால், இது கல்லூரியில் நடக்கிற காதலை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இதுவரை சினிமாவில் சொல்லப்படாத கல்லூரி காதல் என்றும் கூறுகிறார்கள். பொதுவாக அப்பாவுக்கு தெரிஞ்சிக்க கூடாதுன்னு காதலை தான் நாம் பார்த்திருப்போம். காலேஜ்ஜில் லவ் பண்றது அப்பாவுக்காக தான் என்று ஹீரோயினி இந்த படத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழுவினர் சமீபத்தில் சொல்லியிருந்தார்கள். மேலும், இந்த படத்தில் அஸிம்க்கு ஜோடியாக ஆல்யா நடிக்கிறார்.

அஸிம்க்கு ஜோடியாகும் நடிகை:

ஆல்யா என்று சொன்ன உடனே எல்லோரும் ராஜா ராணி சீரியல் ஆலியா மானசா என்று நினைப்பார்கள். அவர் இல்லைங்க, இவர் ஒரு மாடல். இந்த படத்தின் மூலம் தான் இவரும் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியிருக்கிறார். மேலும், இந்த படத்தின் பற்றிய தகவல்கள் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. சின்னத்திரையில் பார்த்த அஸிம்மை வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Advertisement