சினிமாவை பொறுத்த வரை நடிகர்களை விட நடிகைகளின் சினிமா ஆயுள் மிகவும் குறைவு தான். 90ஸ் காலகட்டத்தில் நடித்த பல நடிகர்கள் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு ஜோடியாக நடித்த பல நடிகைகள் ஆள் அட்ரஸ்ஸே இல்லாமல் போய்விட்டனர். அந்த வகையில் விஜய்யின் பூவே உனக்காக படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சங்கீதா என்னவானார் என்பதே பலருக்கும் தெரியாது. விஜய் நடிப்பில் கடந்த 96 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்படம் விஜய்க்கு மாபெரும் ஒரு திருப்பு முனை படமாக அமைந்தது.
விஜய் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்த ஏழு படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஆனால், இந்த படம் தான் விஜயின் திரை வாழ்க்கையில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தில்தான் விஜய்யை ஒரு முழு நடிகராக மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரு படமாக அமைந்திருந்தது. விக்ரமன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கதாநாயகிகளாக அஞ்சு அரவிந்தும் சங்கீதாவும் நடித்தனர்.
90ஸ் ஜெனிலியா சங்கீதா :
இதில் நடித்த சங்கீதா 90களில் நல்ல திறமையுடன் நன்றாக நடித்த மலையாள ஹீரோயின்களில் இவரும் ஒருவர். அதன் பின்னர் ஆளே காணாமல் போனவர். இவருடைய தந்தை மாதவன் நாயரின் பூர்வீகம் கேரளம் தான்.அவருடைய பிஸ்னசுக்காக சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டார். அப்போது அவருக்கு 1974ஆம் ஆண்டு பிறந்தவர் தான் சங்கீதா. 1978லேயே சிநேகிதம் ஒரு பெண்ணோ என்ற ஒரு மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சங்கீதா.
அறிமுகமான ராஜ்கிரண் படம் :
இரத்தத்தின் இரத்தமே என்ற ஒரு தமிழ் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.முதன் முதலாக ஹீரோயினாக ‘எல்லாமே என் ராசா தான்’ என்ற படத்தில் ராஜ் கிரண் இயக்கத்தில் நடித்தார். ஆனால், அவருக்கு என ஒரு நல்ல பெயரை கொடுத்தது விஜயின் பூவே உனக்காக படம்தான். தனது சுட்டித்தனமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்துவிட்டார் அப்போது. அதன் பின்னர் பல படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தது.
சங்கீதா இறுதியாக நடித்த படம் :
அதன் பிறகு சக்கை போடு போட்டு கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்தார்.கடையசியாக 2003ல் மேரி ஆல்பர்ட் என்கிற படத்தில் நடித்துவிட்டு ஒளிப்பதிவாளர் சரவணன் உடன் திருமணம் செய்துகொண்டார். மேலும், இவர் பூவே உனக்காக படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2003 ஆண்டுக்கு பின்னர், எந்த ஒரு படத்திலும் நடிக்காத சங்கீதா தற்போது ஒரு பெண் குழந்தையுடன் வீட்டை கவனித்துக்கொண்டு பொறுப்புடன் இருக்கிறார்.
சிலம்பாட்டம் பட இயக்குனர் :
அதே போல் ஒளிப்பதிவாளராக இருந்த சரவணன், சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் இயக்குனராக மாறினார். சொல்லப்போனால் சங்கீதா தான் தன் கணவரை இயக்குனராக மாற உந்தியது. சிலம்பாட்டம் படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. அதன் பின்னர் எந்த படத்தையும் இயக்கவில்லை. தற்போது பல ஆண்டுகள் கழித்து கெளதம் கார்த்திக்கை வைத்து சிப்பாய் என்ற படத்தை இயக்கி வருகிறார்.