‘எப்பவும் நடிகைகளிடம் அசீம் இப்படி தான் நடந்து கொள்வார்’ – சீரியல் நடிகை சுபத்ரா அளித்த பேட்டி

0
344
azeem
- Advertisement -

சூட்டிங் ஸ்பாட்டிலுமே அசீம் இப்படித்தான் என்று நடிகை சுபத்ரா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கி 50 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் அசீம். சின்னத்திரை சீரியலின் மூலம் பிரபலமானவர் அசீம். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவர் விஜய் டிவி, சன் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

- Advertisement -

அசீம் குறித்த தகவல்:

அது மட்டும் இல்லாமல் இவர் முக்கிய கட்சியின் உறுப்பினராகவும் இருந்தவர். இவர் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுகிறார். இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே அசீம் போட்டியாளர்கள் மத்தியில் திமிராகவும், அடாவடித்தனமாகவும், தன்னுடைய குரல் தான் ஒலிக்க வேண்டும் என்ற நினைப்பிலும் நடந்து கொண்டு இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீம் :

அதிலும் இவர், ஆயிஷாவை வாடி போடி என்று மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது குறித்து ரசிகர்கள் பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். பின் விக்ரமனிற்கும் அசிமிற்கும் இடையே செட்டே ஆகவில்லை. எந்த ஒரு விஷயத்தையுமே இருவரும் மாறி மாறி விவாதம் செய்து கொண்டு வருகிறார்கள். இந்த வாரம் கொடுக்கப்பட்ட பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க்கில் அமுதவாணன்-அசீம், அசீம்-ஜனனிக்கும் இடையே பயங்கரமான வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

-விளம்பரம்-

நடிகை சுபத்ரா அளித்த பேட்டி:

இப்படி அசீம் வாரம் வாரம் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டே இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ள போட்டியாளர்களும் அசீமுக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் அசீம் குறித்து அவருடன் சீரியலில் நடித்த நடிகை சுபத்ரா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த சீரியல் பூவே உனக்காக. இந்த சீரியலில் நடித்த நடிகை சுபத்ரா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவரிடம் பிக் பாஸ் அசீம் குறித்து கேட்டிருந்தார்கள்.

அசீம் குறித்து சொன்னது:

அதற்கு அவர் கூறியிருந்தது, ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு செருப்பு சண்டை ஒன்று வந்தது. அதே போல் பூவே உனக்காக சீரியல் ஷூட்டிங்கிலும் நடந்தது. ஹீரோவுக்கும், ஹீரோயினிக்குமே பயங்கர சண்டை. ஒருவரை ஒருவர் மாற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அதற்குப்பின் தேவிப்பிரியா உடனும் அசீம் பயங்கரமாக சண்டை போட்டிருந்தார். இப்போ அவர் பிக் பாஸ் வீட்டில் எப்படி இருக்கிறாரோ அதுதான் உண்மையான அசீம். அவருக்கு முன்னாடி கை நீட்டி பேசினாலே கோபமாகிவிடுவார். எல்லோருடனுமே சண்டை போடுவார் என்று கூறியிருந்தார்.

Advertisement