பூவிழி வாசலிலே படத்தில் நடித்த குழந்தை இந்த நடிகையா ? புகைப்படம் உள்ளே

0
4346
poovizhi-vaasalile
- Advertisement -

1987ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த படம் பூவிழி வாசலிலே. இந்த படத்தில் சத்திராஜுடன் ஒரு குழந்தை நடித்திருப்பார். அந்த குழந்தையின் பெயர் சுஜிதா. இவர் 1983ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்தவர்.

Sujitha Actress

- Advertisement -

இவருடைய அப்பா பெயர் மணி அம்மா பெயர் ராதா. இவருடைய அண்ணன் சூரியகிரண் ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார். சின்ன வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார் சுஜிதா. பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் கூட சிறு குழந்தையாக நடித்திருப்பார் சுஜிதா.

காற்றுக்கென்ன வேலி, ஜதி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பார். அஜித்தின் வாலி படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்திருப்பார் சுஜிதா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

munthaanai-muduchi

Actress-sujitha

suijitha-actress

தமிழில் விக்ரமின் தாண்டவம் படத்தில் நடித்திருப்பார். கடைசியாக கொட்டாம்பட்டி துவக்கப்பள்ளி படத்தில் நடித்தார். அதன்பின்னர் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் சீரியலில் நடித்து வருகிறார். தமிழில் கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, பைரவி, ஆவிகளுக்கு பிரியமானவள், மகாராணி, பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை, துளசி, மைதிலி, விளக்கு வச்ச நேரத்திலே, ஒரு கை ஓசை என பல சீரியலில் நடித்தார்.

thandavam

கடந்த 2012ஆம் ஆண்டு தனுஷ் என்ற தயாரிப்பாளருடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார்.