பிரபல சின்னத்திரை நடிகை குன்னூரில் கைது..! நடந்தது இதுதான்..! அதிர்ச்சியில் சீரியல் நடிகர்கள்

0
2863
Nilani-serial-actress
- Advertisement -

கடந்த மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் 100 வது நாள் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மக்களும் அரசியல் வாதிகளும்,நடிகர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

-விளம்பரம்-

nilani actress

- Advertisement -

இந்நிலையில் போலீசாரின் இந்த வன்முறையை கண்டித்து பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வரும் நடிகை நிலாணி என்பவர் போலீஸ் உடை அணிந்து ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டியிட்டர். அந்த வீடியோவில் அவர், ‘போலீஸ் உடையை தான் அணிந்திருப்பது அருவருப்பாக இருக்கிறது’ என்று கூறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து போலீசாரை இழிவு படுத்தும் விதத்தில் பேசியது, சமூக வலைத்தளத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டது, ஆள் மாறாட்டம போன்ற 4 பிரிவுகளில் நடிகை நிலானி மீதி வழக்கு தொடர்பட்டிருந்தது. இந்நிலையில் நடிகை நிலானியை குன்னுரில் காவல் துறையினர் கைது செய்தனர்.

-விளம்பரம்-

nillani

nilani actress

இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சின்ன திரை நடிகர், நடிகைகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நிலானி தெரிவித்தது என்னவெனில்’ நான் உணர்ச்சிவசப்பட்டு காவல் துறையினரை அவதூறாக பேசி விட்டேன் , அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த வழக்கை நான் சட்ட ரீதியாக நீதி மன்றத்தில் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் ‘ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement