சிவகார்த்தகியேன் படத்தில் பாடகராக அறிமுகமாகும் யாரடி நீ மோகினி சீரியல் நடிகர்.

0
29164
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “ஹீரோ”. மேலும், மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ ஷங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்து உருவாகி வரும் படம் ஹீரோ. இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்து வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மேலும்,இந்த படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்ற தகவலும் வந்துள்ளது.

-விளம்பரம்-
ஷ்யாம்

- Advertisement -

இந்த படத்தில் மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அவர்கள் ஹீரோயினியாக நடிக்க உள்ளார். இதுவே தமிழில் அவருடைய முதல் படமாகும். இந்நிலையில் ‘ஹீரோ’ படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியானதை தொடர்ந்து படத்தின் ‘சிங்கிள்’ பாடலும் வெளியாகி உள்ளது. இந்த சிங்கிள் பாடலை பாடியிருப்பவர் சின்னத்திரையில் பிரபலமான நடிகர் ஷாம். சின்னத்திரையில் ஷாம் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் கானா பாடகரும் ஆவார். இவர் பல்வேறு கானா பாடல்களை பாடி உள்ளார். இது குறித்து ஷ்யாமிடம் பேசியபோது அவர் கூறியது, ஒரு நிகழ்ச்சிக்காக திருவள்ளூர் நான் போய் இருந்தேன்.

அப்போது பின்னணி பாடகர் செந்தில் தாஸ் எனக்கு போன் செய்து ஒரு பாட்டு பாடணும் என்று சொன்னார். நான் எப்போதும் மேடைகளில் பாடுவது வழக்கம். பாட்டு தானே என்று உடனே சரி என்று சொன்னேன். பிறகு அவர் யுவன் இசையில் பாட வேண்டும் என்று சொன்னவுடன் எனக்கு தலையே சுற்றி விட்டது. ஏனென்றால் இதுவரைக்கும் நான் சினிமாவில் பாடியது கிடையாது. அதுவும் முதல் பாட்டே யுவன் இசையில் பாட வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அதனால் காலையில் ஸ்டுடியோவிற்கு நேரத்திற்கே சென்றிருந்தேன். பின் அங்கு பாடுவதற்கான வரிகள் என்னிடம் கொடுத்தார்கள். அதுவும் ஹை பிச் பாட்டு என்று சொன்னார்கள்.

-விளம்பரம்-
சிவகார்த்திகேயன்

மேலும்,அரை நாட்களில் பாட்டை பாடி முடித்து விட்டேன். ஆனால், அந்த இடத்தில் யுவன் சார் இருந்ததை நான் கவனிக்கவில்லை. ஏதோ கனவு மாதிரி பாட்டு பாடி முடித்து விட்டு நான் வீட்டிற்கு சென்று விட்டேன். நான் பாடியது என் மனைவி, என் அம்மாவை தவிர யாருக்கும் சொல்லவில்லை. ஏனென்றால் திடீரென்று சிங்கிள் பாட்டு நீக்கிவிட்டார்கள் என்றால் ரொம்ப கஷ்டமாக இருக்கும் என நினைத்துக்கொண்டு சொல்லவில்லை. திடீரென்று எனக்கு யுவன் சார் ஸ்டுடியோவில் இருந்து போன் வந்தது. பாட்டு கரெக்ஷன் வாருங்கள் என்று சொல்லி இருந்தார்கள்.

அப்போது தான் நான் யுவன் சாரை பார்த்து பேசினேன். மேலும்,யுவன் சார் அவர்கள் என்னிடம் நீங்கள் சூப்பராக பாடி இருக்கீரிகள் பாஸ் என்று என்னை பாராட்டினார். எனக்கு சினிமாவில் பாட்டு பாடுவது ரொம்ப நாள் கனவாக இருந்தது. காலேஜ் படிக்கும்போதே பல மேடைகளில் கானா பாட்டு தான் எப்போதுமே பாடிக்கொண்டே இருப்பேன். பின்னர் நிறைய நாடகங்களில் நடித்து உள்ளேன். ஆனால், சினிமாவில் பாட வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் கண்ட கனவு இப்போது தான் நிறைவேறியது என்று ஆனந்த கண்ணீருடன் பேசினார்

Advertisement