ரஞ்சிதாவை போல நித்யானந்தாவை அடிக்கடி சந்திக்கும் விஜய் பட நடிகை ? உண்மை என்ன ?

0
771
ranjitha
- Advertisement -

90ஸ் புகழ் நடிகை கௌசல்யா சாமியார் நித்யானந்தாவை அடிக்கடி சந்திக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. போலி சாமியார் நித்தியானந்தாவை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு சினிமா பிரபலங்களை விட சோசியல் மீடியாவில் சர்ச்சைகளில் சிக்கிய நாயகன். இந்து மத போதனைகளை பற்றி கூறி பாலியல் புகார்களில் சிக்கியவர் சாமியார் நித்யானந்தா. இவருக்கு இந்திய நாட்டில் மட்டும் இல்லாமல் உலகில் பல நாடுகளில் ஆசிரமங்கள் உள்ளன.

-விளம்பரம்-

உலக அளவில் இவருக்கு பக்தர்கள் உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் நித்தியானந்தா மீதும் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் பல புகார்கள் எழுந்து வருகின்றன. குழந்தைகள் கடத்தல், பாலியல் துஸ்பிரயோகம், ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்ய வந்த குழந்தைகளை பாலியல் கொடுமைப் படுத்துதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்து இருக்கிறது. மேலும், மத்திய அரசு நித்யானந்தாவை தீவிரமாக தேடி வருகிறது.

- Advertisement -

நித்தியானந்தா- ரஞ்சிதா சர்ச்சை:

இது ஒரு பக்கம் இருக்க, நித்தியானந்தா என்றாலே நமக்கு நினைவில் வருவது நடிகை ரஞ்சிதா தான். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிகை ரஞ்சிதாவுடனான நித்யானந்தா படுக்கை அறைக் காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்ததே. ரஞ்சிதா தமிழ் சினிமாவில் முக்கிய நாயகியாக வலம் வந்தவர். ஜெய்ஹிந்த் படத்தில் அர்ஜுடன் நடித்து பிரபலம் ஆனவர். இதன் பின் பல படங்கள் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரஞ்சிதா.

Ranjitha

நித்தியானந்தா கைலாசம்:

தற்போது ரஞ்சிதா சாமியார் ஆகிவிட்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் போலி சாமியார் நித்தியானந்தா உடன் ரஞ்சிதா இருந்த படுக்கை அறைக் காட்சிகள் வெளியாகி மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார். இந்த வீடியோ மூலம் சினிமாவில் அவர் வாங்கி வைத்த மொத்த பெயர், புகழ் எல்லாமே டேமேஜ் ஆனது. அதன் பின்னர் வேறு வழியின்றி அந்த ஆசிரமத்திலேயே செட்டில் ஆனார். அதோடு நித்தியானந்தா கைலாசம் என்ற கற்பனை நாட்டில் தான் இருப்பதாக அடிக்கடி கூறிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

கௌசல்யா திரைப்பயணம்:

எந்த நேரத்திலும் அவர் போலீசில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. அதோடு நித்தியானந்தா ஏற்கனவே பல நடிகைகளுடன் தொடர்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 90ஸ் புகழ் நடிகை நித்யானந்தாவை அடிக்கடி சந்தித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கௌசல்யா. இவர் விஜய், பிரசாந்த், பிரபு, கார்த்திக் போன்ற பல பிரபலங்களின் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

நித்தியானந்தா- கௌசல்யா:

இந்த நிலையில் நடிகை கௌசல்யா அவர்கள் நித்தியானந்தாவின் தீவிர பக்தியாக இருந்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் அடிக்கடி அவரை சந்திக்க சென்று வருவதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது. அவர் கைலாசத்திற்கு அடிக்கடி செல்வது உண்மையா? இல்லையா? என்று கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும் கவுசல்யா நித்யானந்தாவை சந்திக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது 42 வயதாகும் கௌசல்யாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement