ஆத்தி, 90ஸ் கிட்ஸ்களை பீதியில் உறைய வைத்த பொட்டு அம்மன் வில்லனா இது – நிஜத்தில எப்படி இருக்கார் பாருங்க.

0
5861
- Advertisement -

பொட்டு அம்மன் படத்தின் வில்லனாக நடித்து மக்களை மிரள வைத்த நடிகரின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் வில்லன்களை பார்த்தால் பலருக்கும் கோபமும், ஆத்திரமும் பொங்கும். அதிலும் ஒரு சில நடிகர்களை பார்த்தால் மக்கள் சாபம் விட்டு பயங்கரமாக திட்டுவார்கள். ஆனால், ஒரு சில வில்லன்களை பார்த்தால் மட்டும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பல பேரும் பயத்தில் உறைந்து விடுவார்கள்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கு தன்னுடைய உருவத்திலும், நடிப்பிலும் கொடூரமாக நடித்து இருப்பார்கள். அந்த வகையில் மக்களை உறைய வைத்த வில்லன்களில் ஒருவர் தான் பொட்டு அம்மன் பட வில்லன். அவருடைய பெயர் சுரேஷ் கிருஷ்ணா. இயக்குனர் ராஜரத்தினம் இயக்கத்தில் 2000 ஆண்டு வெளிவந்த சாமி திரைப்படம் தான் பொட்டு அம்மன்.

- Advertisement -

பொட்டு அம்மன் படம்:

இந்த படத்தில் கே ஆர் விஜயா, ரோஜா,சுவலக்ஷ்மி, வேணு, மணிவண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி அலறவிட்டவர் நடிகர் சுரேஷ் கிருஷ்ணா. இவரை 90ஸ் கிட்ஸ்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு கொடூரத்தனமாக இந்த படத்தில் நடித்திருந்தார்.

சுரேஷ் கிருஷ்ணா குறித்த தகவல்:

இவர் மலையாளத்தில் மிகப்பெரிய நடிகர் ஆவார். இருந்தாலும், இவர் தமிழில் பொட்டு அம்மன் படத்தின் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பிரபலம் கிடைத்தது. அதோடு இவர் நடிகர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளரும் அவர். மேலும், இவர் வெள்ளி திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் பொட்டு அம்மன் பட வில்லனின் தற்போது புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

பொட்டு அம்மன் பட வில்லனின் புகைப்படம்:

அதாவது, பொட்டம்மன் திரைப்படத்தில் கொடூரமான முகத்துடன் அரக்கன் போல் காட்சியளித்த இவருடைய உண்மையான முகம் பலருக்கும் தெரியாது. தற்போது சுரேஷ் கிருஷ்ணாவுடைய புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்து பலருமே நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் என்று சொல்லலாம். அவரை பார்ப்பதற்கு ஹீரோ போல் இருக்கிறார். 22 வருடங்களாக இவரை பார்த்து பீதியில் இருந்த ரசிகர்கள் தற்போது இருக்கும் புகைப்படம் பார்த்து, இவரை பார்த்தா பயந்தோம் என்றெல்லாம் கலாய்த்து இருக்கின்றார்கள்.

Advertisement