சீரியல் நடிகையுடன் நெருக்கம்.! கடுப்பான பூவே போச்சுடவா நடிகரின் மனைவி.!

0
1640
Poovey-Puchudava

ஒரு காலத்தில் ஜீ தொலைக்காட்சி சேனல் நம்பர் என்ன என்பது கூட தொலைக்காட்சி ரசிகர்களுக்கு தெரியாது. ஆனால், சமீப காலமாக தொலைக்காட்சி ரசிகர்கள் பலரும் ஜீ தமிழ் தொழிகாட்சியின் ரசிகர்களாக மாறியுள்ளனர். அதற்கு முக்கிய காரணமே தற்போது இந்த தொலைகட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு புதிய தொடர்கள் தான்.

Image result for povey puchudava serial

தற்போது ஜீ தமிழ் தொலைகட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் நல்ல தொடர்களில் பல மாற்றங்களை செய்து வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சுடவா சீரியல் இந்த தொலைக்காட்சியின் வெற்றி சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

பூச்சூடவா சீரியலிலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சீரியலின் நாயகன்  தினேஷ் கோபாலசாமி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் இனி கார்த்திக் வாசு நாயகனாக நடிக்க உள்ளார். இந்த தகவலை கார்த்திக் வாசு தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். “என் அடுத்த  புராஜக்ட் பற்றி உங்கள் அனைவருக்கும் அறிவிப்பதில் மகிழ்ச்சி. என்னிடம் பலர் அடுத்து என்ன பிளான் என நிறைய கேள்விகளைக் கேட்டீர்கள். இதோ உங்களுக்கான பதில். பூவே பூச்சூடவா சீரியலில் லீட் ரோலில் நடிக்கிறேன். எப்போதும் போல உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்’’ என கார்த்திக் வாசு பதிவிட்டுள்ளார்.

Image result for karthik vasu

ஆனால், இந்த சீரியலில் நடித்தால் கார்த்திக்கின் மனைவி சற்று மனவருத்தத்தில் இருக்கிறாராம். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசிய கார்த்தி’இந்த சீரியலில் நடிக்கும் போது முதலில் மக்கள் செட் ஆகவில்லை என்றனர், ஆனால் இப்போது நல்ல விமர்சனங்கள் வருகிறது.இப்போ பூவே பூச்சூடவா சீரியலில் நாயகியும் நானும் கண்களாலேயே ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் உள்ளது. அதைப்பார்த்து என் மனைவி என்ன இப்படி ரொமான்ஸ் செய்கிறீர்கள் என்று கோபப்பட்டார். இது சீரியலுக்காக என்று அவரை சமாதானப்படுத்தினேன், ஆனால் நிஜமாகவே இந்த வேடம் கிடைத்ததற்கு என்னை விட என் மனைவி தான் ஹேப்பி என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement