அயோத்தி ராமர் கோவில் : மொத்த முதல் நாள் செலவையும் ஏற்ற அதிபுருஷ் பிரபாஸ். எத்தனை கோடி தெரியுமா?

0
466
Prabhas
- Advertisement -
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் கொடுக்கப்படும்  உணவின் மொத்த செலவையும் நடிகர் பிரபாஸ்  ஏற்று இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் அனைவரும் அறிந்ததே. இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது. ஸ்ரீராம் உள்நாட்டு தீர்த்தத்தின்படி இராமன் கோயில் மூன்று அடுக்குகளை கொண்ட தளம்.  

ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 392 தூண்களையும், 44 கதவுகளையும் இந்தக் கோயில் கொண்டுள்ளது. மேலும், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு செல்லும் மேலும், நுழைவாயிலில் யானைகள், சிங்கங்கள், அனுமான் மற்றும் கருடா போன்ற சிலைகள் இருக்கிறது. பாரம்பரிய முறையில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இப்படி புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயில் வருகிற 22 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. அந்த தினத்தில் அனைவருமே வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

அயோத்தி ராமர் கோவில் விழா:

- Advertisement -

இதனால் சோசியல் மீடியா முழுவதும் அயோத்தி ராமர் கோவிலை பற்றிய செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாக இருக்கிறது. இந்தியா நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை காண வருகை தர இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

விழா குறித்த தகவல்:

-விளம்பரம்-

அயோத்திக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான ராம பக்தர்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கான மொத்த சாப்பாடு செலவையும் பிரபாஸ் ஏற்றுக்கொள்ள இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ராமர் கோவில் திறப்பு விழாவை ஓட்டி அயோத்தியில் சுமார் 300 இடங்களில் பக்தர்களுக்கு உணவளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.

மொத்த செலவு குறித்த தகவல்:

அயோத்தி பிரதிஷ்டை நாளில் மட்டும் சாப்பாடு செலவு சுமார் 50 கோடிக்கு மேலும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மொத்த செலவையுமே நடிகர் பிரபாஸ் ஏற்க முடிவு செய்திருக்கிறாராம்.
பிரபாஸ் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்றே சொல்லலாம். அன்னதானம் என்றால் முதலில் ரெபல் ஸ்டார் கிருஷ்ணம் ராஜு மற்றும் அவருடைய வாரிசான யங் ரெபல் ஸ்டார் பிரபாஸ் தான் நினைவுக்கு வருவார்கள். நடிகர்கள் மட்டுமில்லாமல் செட் பாய்ஸ் வரை என பலருமே பிரபாஸ் வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு தான் செல்வார்கள்.

பிரபாஸ் செய்யும் சேவை:

சூட்டிங் நேரத்திலும் கூட பிரபாஸ்க்கு தனியாக சாப்பிடும் பழக்கம் கிடையாது. மதிய உணவு என்றாலே ஷூட்டிங் லொகேஷன் நண்பர்கள், படக்குழுவினர்கள் என அனைவரையுமே ரெபெல் ஸ்டார் உணவு ஆர்டர் செய்து அன்றைய எல்லா செலவையும் அவர்தான் பார்த்துக் கொள்வார். அன்று ஒரு நாளே இரண்டிலிருந்து மூன்று லட்சம் வரை செலவு செய்வாராம்.கிருஷ்ணம் ராஜூவின் மறைவுக்கு பிறகு பிரபாஸும் பேட கர்மா தினத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு சாப்பாடு வழங்குவாராம். கிட்டத்தட்ட பல கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்வார். தற்போது அயோத்தியில் 50 கோடி ரூபாய் செலவு செய்து உணவு தானம் செய்ய இருக்கும் தகவல்தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement