ஆதி புருஷ் டீசரை வச்சி செய்யும் நெட்டிசன்கள் – இயக்குனர் மீது கோபப்பட்டாரா பிரபாஸ்? வைரலாகும் வீடியோ.

0
184
- Advertisement -

பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் டிசரை பலரும் கிண்டல் செய்து வரும் நிலையில் தயாரிப்பாளர் மீது பிரபாஸ் கடுப்பானதாக ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. டோலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த வர்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர். அதன் பின் இவர் நடிப்பில் வந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதிலும், 2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் இந்திய அளவில் பிரபலமானது.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் அவர்கள் தெலுங்கில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்ந்தார். அதோடு இந்த படத்தின் மூலம் பான் இந்திய ஸ்டாராக பிரபாஸ் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதன் பின் இவர் நடிப்பில் வெளிவந்த சாஹோ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதது. மேலும், 400 கோடிகளுக்கு மேல் இந்தப் படம் வசூல் செய்தது என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ராதே ஷ்யாம்.

- Advertisement -

ராதே ஷ்யாம் படம்:

இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், இந்த படம் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால், இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருந்தாலும் இந்த படம் மிகவும் மெதுவாக சென்றதால் ரசிகர்களை கவரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் படம் மிகப்பெரிய தோல்வி என்று கூறப்படுகிறது.

ஆதி புருஷ் படம்:

தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஆதிபுருஷ். பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் பிரபாஸின் நடிப்பில் வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் நடிப்பில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் பிரபாஸ் மற்றும் அவரது ரசிகர்கள் அடுத்து வெளிவரவுள்ள ஆதிபுருஷ் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்து இருந்தனர். இந்த படத்தை ஓம் ராவுத் இயக்கி இருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

படத்தின் டீசர்:

3d பிளஸ் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. 500 கோடி பட்ஜெட்டில் ஃபேன் இந்திய படமாக ஆதிபுருஸ் படம் உருவாகியுள்ளதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆதிபுரூஸ் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பிரபாஸை ஃபேன் இந்திய ஸ்டார் ஆகவே கொண்டாடி இருந்தார்கள்.

கிண்டல் செய்யும் பொன்னியின் செல்வன் ரசிகர்கள்:

அதுமட்டுமில்லாமல் மணிரத்தினம் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தை கூட பாகுபலி ரசிகர்கள் கிண்டல் செய்திருந்தார்கள். இந்த சூழ்நிலையில் பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிருக்கும் ஆதிபுருஷ் டிசரை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் கேலி செய்து வருகிறார்கள். அதில் சிலர், இது என்ன கோச்சடையான் பட தெலுங்கு வெர்ஷனா? பொம்மை படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். சுட்டி டிவி ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றெல்லாம் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இயக்குனர் மீது கடுப்பானாரா பிரபாஸ் :

இப்படி டீசரையே வைத்து செய்யும் ரசிகர்கள் படம் வெளியானால் என்னெல்லாம் சொல்லுவார்கள்? என்று தெரியவில்லை. இந்நிலையில் சோஷியல் மீடியாக்களில் ஆதி புருஷ் படத்தை கலாய்த்து வெளியாகி இருக்கும் மீம்ஸ்கள் ஒருபக்கம் இருக்கையில் நடிகர், பிரபாஸ் இயக்குனர் ஓம் ராவத்தை ரூமுக்கு வாங்க என அழைக்கும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பாதுகாவலர்களுடன் நடந்து செல்லும் பிரபாஸ் , திடீரென்று திரும்பி இயக்குனர் ஓம் ராவத்தை ரூமுக்கு வாருங்கள் என அழைக்கிறார். டீசரை பார்த்த பிரபாஸ் ரியாக்‌ஷன் தான் இந்த ரூமுக்கு வாங்க வீடியோ என ரசிகர்கள் கிளப்பி விட்டுள்ளனர்.

Advertisement