இந்தியாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதிலும், 2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் இந்திய அளவில் பிரபலமானது. தற்போது பான் இந்தியா படமாக பிரபாஸ் நடிப்பில் வெளியாகி உள்ள ஆதிபுருஷ் ராமாயணம் பற்றிய கதை. ராமாயணம் கதையை மையக்கமாக வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டாலும், இதுவரையில் எந்த படமும் தற்போது உள்ள நவீன தொழில் நுட்பத்தை தற்போது எடுக்கவில்லை.
Project K – Official poster.
— Blue Sattai Maran (@tamiltalkies) July 19, 2023
ஆஹா…Excellent creative designing team. கங்குராட்ஸ்.#ProjectK #Prabhas #IronMan #TonyStark pic.twitter.com/GR0onb1SER
இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதோடு பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பதினால் எதிர்பார்ப்பு இன்னமும் அதிகமானது. மேலும், இந்த ஆதிபுருஷ் திரைப்படமானது இராமாயணத்தில் வரும் யுத்த காண்டம் பற்றிய கதையாகும். ராமனாக பிரபாஸும் , சீதையாக கிருதி சனோனும், ராவணனாக சயீப் அலி கான் நடித்திருக்கிறார்கள். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது.
அதோடு இந்த படத்திற்கு சிலர் ஆதிபுருஷ் படத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து பதிவுகளை போட்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் படத்தினுடைய கிராபிக்ஸ் ரொம்ப மோசமாக இருக்கிறது எல்லாம் விமர்சனம் செய்திருந்தார்கள். மேலும், இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பலரும் கடிதம் எழுதி இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மீது வழக்கும் தொடர்த்து இருந்தனர்.
இப்படி ஒரு நிலையில் நடிகர் பிரபாஸ்ஸின் சலார் படம் வெளியாக இருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பிரபாஸ் நாக் அஸ்வின் இயக்கத்தில் ‘project k’ படத்தில் நடிக்க இருக்கிறார். மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான நடிகையர் திலகம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் நாக் அஸ்வின். இந்த படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் பிரபாஸின் முகம் தவிர உடல் அனைத்தும் ரோபோ போல அமைந்துள்ளது. இதனையடுத்து அவை ஃபேன் மேட் போஸ்டர் போல உள்ளதாகவும் அடுத்த ஆதிபுருஷ்ஷா எனவும் ரசிகர்கள் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர். எதோ ஒரு போஸ்டரின் பிரபாஸின் முகத்தை வெட்டி வைத்து ஒட்டியதுபோல இருப்பதாகவும் விமரசனம் செய்து வருகின்றனர். மேலும், இந்த படத்தில் கமல் நடிக்க கூடாது என்றும் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே, ஆதிபுருஷ் படத்தால் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கும் பிரபாஸ் இந்த படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். மேலும், இந்தப் படத்தின் கிளிம்ஸ் வீடியோ நாளை அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் காமிக் கான் நிகழ்ச்சியில் வெளியிடப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு கமல், பிரபாஸ் உள்ளிட்டோர் அமெரிக்கா சென்றுள்ளார்கள்.