ஏர்போட்டில் பிரபாஸ் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள். நீங்களே பாருங்க.

0
97555
prabhas
- Advertisement -

டோலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த வர்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர். இவர் நடிப்பில் வந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. அதிலும் 2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் இந்திய அளவில் பிரபலமானது. இந்த படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் அவர்கள் தெலுங்கில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்ந்தார். இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோகளில் ஒருவராகிவிட்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சாஹோ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதது.

-விளம்பரம்-
Image

- Advertisement -

மேலும், 400 கோடிகளுக்கு மேல் இந்தப் படம் வசூல் செய்தது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் அவர்கள் தற்போது இளம் இயக்குனர் ஒருவரின் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் காதல் கதை அம்சம் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் அவர்கள் சமீபத்தில் ஏர்போர்ட் சென்று உள்ளார். அங்கு அவர் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு வந்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகினார்கள். ஏன் இப்படி இவர் மாஸ்க் அணிந்து வந்திருக்கிறார்? என்று பலரும் கேள்வி கேட்டனர்.

அது என்னவென்றால், கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பாதுகாப்பிற்காக நடிகர் பிரபாஸ் இப்படி மாஸ்க் அணிந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இந்த கரோனா வைரஸ். உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று உள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Image

இதனால் மக்கள் அனைவரும் பயங்கர பீதியில் உள்ளார்கள். சீனா மற்றும் உலக நாடுகளில் தற்போது இந்த கரோனா வைரஸ் தாக்குதலினால் மூவாயிரத்துக்கும் மேல் உயிரிழந்து உள்ளார்கள். தற்போது இந்தியாவிலும் இந்த கரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது. தற்போது நடிகர் பிரபாஸ் மாஸ்க் அணிந்து கொண்டு விமான நிலையத்தில் சென்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement