லதா மகேஸ்கரை தமிழ் சினிமாவிற்கு மீண்டும் கொண்டு வந்த சிவாஜி குடும்பம் – அந்த பாடலுக்கு அவர் வாங்கிய சம்பளம் பற்றி பிரபு தகவல்.

0
761
sivaji
- Advertisement -

இந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான பழம்பெரும் பின்னணி பாடகியாக திகழ்ந்தவர் லதா மங்கேஷ்கர். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ஹேமா. இவரது தந்தை தீனாநாத் மங்கேஷ்கர் மராத்தி மொழியில் நன்கு அறியப்பட்ட பாடகராகவும், நாடக ஆசிரியராகவும் இருந்தவர். பின் 1949ஆம் ஆண்டு மகள் எனும் இந்தி படத்தில் தனது முதல் இசை பாடலை பாடி இசை பயணத்தை தொடங்கினார் லதா மங்கேஷ்கர். அதன் பின்பு பல்வேறு இந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடி திரை இசையில் உச்சத்தை தொட்டார். மேலும், தமிழில் பல பாடலைப் பாடியுள்ளார். மேலும், லதா மங்கேஷ்கர் இந்திய இசையுலகில் மெல்லிசை ராணியாக சுமார் அரை நூற்றாண்டு காலம் வலம் வந்தவர்.

-விளம்பரம்-

அதோடு இவர் இந்தியாவின் இசைக்குயில் என புகழ்பெற்றவர். இவர் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்று இருக்கிறார். அதோடு இந்திய சினிமாவில் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே, பாரத ரத்னா விருது, பத்மவிபூஷன் மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், இவர் பாடகியாக மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜனவரி 8ஆம் தேதி மும்பையில் உள்ள பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். 28 நாட்களாக இவர் தீவிர தொடர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

- Advertisement -

லதா மங்கேஷ்கர் காலமானார்:

இருந்தாலும் சிகிச்சை பலனின்றி லதா நேற்று காலை 8 மணிக்கு மேல் லதா மங்கேஷ்கர் இறந்து விட்டார். பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவு இந்தியாவில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பற்றிய நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இவரைப்பற்றி நடிகர் பிரபு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ஆனந்த் என்ற திரைப்படத்தில் ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலை லதா மங்கேஷ்கர் தான் பாடியிருந்தார். என்னுடைய அண்ணன் ராம்குமார் தான் லதா மங்கேஷ்கர் பாட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். பின் அவர் எங்களுடைய அழைப்பை ஏற்று ஆனந்த் படத்தில் பாடிச் சென்றார். மேலும், அந்த படத்தில் அப்பாடலை பாடியதற்காக அவர் சம்பளம் வேண்டாம்,

லதா மங்கேஷ்கர் பற்றி பிரபு அளித்த பேட்டி:

என் மூத்த அண்ணன் சிவாஜி கணேசனுக்காக பாடுகிறேன் என்று கூறி சம்பளம் வாங்கவில்லை லதா மங்கேஷ்கர். அவரது சகோதரிகளும் என் தந்தையின் தீவிர ரசிகைகள். அவர்கள் என் தந்தையை அண்ணன் என்று தான் அன்போடு அழைப்பார்கள். இந்த பந்தம் எங்களுக்கு 1960 காலத்திலிருந்தே உருவானது. அப்பாவின் ஒரு படத்தை பார்த்துவிட்டு லதா மங்கேஷ்கர் சென்னை வந்தார். அப்போதிலிருந்து அப்பாவுக்கும் லதா மங்கேஷ்கருக்கும் இடையே பந்தம் உருவானது. மேலும், அவர் எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கத்தினர் ஆகவே இருந்தார்.

-விளம்பரம்-

லதா மங்கேஷ்கர் அனுப்பி வைக்கும் புகைப்படம்:

அது மட்டுமில்லாமல் அவர் ஏதேனும் ஒரு புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைத்து கொண்டு இருப்பார். சில நேரங்களில் கடவுள் புகைப்படங்களை அனுப்பி வைப்பார். அவர் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் கூட எனக்கு சில புகைப்படங்களை அனுப்பினார். அவர் பெரும்பாலும் கடவுளர், ஸ்ரீரடி குரு, பாபா, எனது அப்பா என மாறி மாறி அவர்களின் புகைப்படங்களை அனுப்பி வைப்பார். அதுமட்டுமில்லாமல் எங்களின் அன்னை இல்ல வளாகத்தினுள் ஒரு சிறிய பங்களா இருக்கிறது. அது தான் எங்களுக்கும் லதா மங்கேஷ்கருக்குமான உறவுக்கு சாட்சி. சென்னை வரும்போது லதா மங்கேஷ்கர் அங்கு தான் தங்கி செல்வார்.

லதா மங்கேஷ்கருக்காக அப்பா கட்டிய பங்களா:

அதற்காகத்தான் அப்பா இரண்டே மாதங்களில் அதை கட்ட வைத்தார். லதா மங்கேஷ்கருக்கு ஓட்டல் உணவு பிடிக்காது. அதனால், அம்மாவே அவர் கையால் அவருக்கு சமையல் செய்து கொடுப்பார். அப்போது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எல்லாம் இப்போது போல் சுலபமாக கிடைக்காது. அதனால் அம்மா அவர்களுக்காக பிளாஸ்கில் சுடு தண்ணீர் கொடுத்து அனுப்புவார். பதிலுக்கு லதா அவர்களும் தீபாவளி, விழா காலங்களில் எங்கள் அனைவருக்கும் துணிகளும், பரிசுகளும் அனுப்புவார். கடந்த தீபாவளி வரை அவர் எங்களுக்கு எல்லாமே அனுப்பி தான் வைத்திருந்தார். மேலும், இவர் தமிழில் சில பாடல்களைப் பாடியிருந்தாலும் என்றென்றும் நீங்கா பாடல்களை பாடி சென்றிருக்கிறார். இவருடைய ஆத்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்திக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement