மருத்துவமனைக்கு சென்ற இடத்தில் காதல் ? காதும் காதும் வைத்தார் போல முடிந்ததா பிரபுதேவாவின் இரண்டாம் திருமணம் ?

0
2608
prabhu
- Advertisement -

நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா இரண்டாம் திருமணத்தையே முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபு தேவா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் பிரபலமான நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபு தேவாவின் நடன திறமைக்காக இவரை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்றும் அழைக்கிறார்கள். இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடனம் ஆடி உள்ளார்.அதே போல தமிழில் போக்கிரி, இந்தியில் வான்டெட் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-59.jpg

பிரபுதேவா 1995 இல் ராம்லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா ,ஆதி த் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். இதில் பிரபுதேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 இல் காலமானார். அதன் பின்னர் பிரபுதேவா நடிகை நயன்தாராவின் காதல் மலர்ந்தது. பிரபுதேவா, நயன்தாராவுடனான பிரச்சனையால் தனது மனைவியை விவாகரத்து செய்தார். பின்னர் தனியாக தான் வாழ்ந்து வருகிறார். ஆனால், நயன்தாரா விக்னேஷ் ஷிவானிடம் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரபுதேவாவின் முதல் மனைவி பேசுகையில் நயன்தாராவை எந்த ஒரு நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்தாலும், அவளை சந்திக்க நேர்ந்தாலும் அப்படியே ஓங்கி ஒன்னு பலார்ன்னு கன்னத்தில் அரையலாம் என்று தோன்றுகிறது என்று கோபத்துடன் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிரபு தேவா தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் நடிகர் பிரபு தேவாவிற்கு கடந்த செப்டம்பர் மாதமே திருமணம் முடிந்துவிட்டது என்று பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

கடந்த சில காலமாக பிரபுதேவா முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அந்த முதுகுவலி பிரச்சினையை சரி செய்வதற்காக பிசியோதெரபிஸ்ட் ஒருவரிடம் பிரபுதேவா சிகிச்சை பெற்று வந்தாராம். அவருக்கு சிகிச்சை பார்த்தது ஒரு பெண் மருத்துவர் தானம். முதுகு வலிக்காக அந்த பெண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றுவந்த பிரபுதேவாவிற்கு காதல் ஏற்பட்டதால் காதும் காதும் வைத்தது போல பிரபுதேவா திருமணத்தையே முடித்து விட்டார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை பிரபுதேவா தரப்பில் இருந்தும் இதுகுறித்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

-விளம்பரம்-
Advertisement