தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் மூக்குத்தி அம்மன் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களும், கஷ்டங்களும் இருந்தது.
நயன்தாரா அவர்கள் தன்னுடைய கடந்த வாழ்க்கையை மறந்து அடுத்த கட்டத்தை நோக்கி சென்று இருக்கிறார். மேலும், நயன் நீண்ட காலமாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது மீண்டும் ஒரு புதிய ஒரு வதந்தி சோசியல் மீடியாவில் கிளம்பியுள்ளது. அது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் பிரேக் ஆகிவிட்டது என்று கூறப்படுகிறது.
இதையும் பாருங்க : உதவி செஞ்சிட்டு பப்லிசிட்டி பண்றவன் எல்லாம். வெளுத்து வாங்கிய வில்லன் நடிகர் தீனா.
பொதுவாகவே நயன்தாரா அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட வாழ்கை குறித்து எந்த ஒரு வதந்திகள் வந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளார். இந்நிலையில் பிரபுதேவாவின் முதல் மனைவி ராம்லதா அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் நயன்தாரா குறித்து பேசி இருப்பது தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபுதேவா மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து வந்தார்கள்.
பிரபு தேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள். பின் பிரபுதேவா தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நயன்தாராவுடன் வாழ்ந்து வந்தார். மனைவி குழந்தைகளை பிரிந்து வந்தாலும் அவர்களை மறக்க முடியாமல் பிரபு தேவா தவித்தார். இதுவே நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு நாளடைவில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள்.
அதற்குப் பிறகு தான் நடிகை நயன்தாரா அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார். தற்போது தமிழ் சினிமா உலகில் ஹாட் ஜோடிகளாக வலம் வருவதே நம்ம நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தான். இந்நிலையில் நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே இருந்த உறவால் இன்னும் மனக் கசப்புடன் இருக்கிறார் ராம்லதா என்று தெரியவந்துள்ளது. சமீபத்தில் ராம்லதா பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பது, நயன்தாராவை எந்த ஒரு நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்தாலும், அவளை சந்திக்க நேர்ந்தாலும் அப்படியே ஓங்கி ஒன்னு பலார்ன்னு கன்னத்தில் அரையலாம் என்று தோன்றுகிறது. நயன்தாராவால் தான் என்னுடைய பதினைந்து வருட சந்தோஷமான திருமண வாழ்க்கை முடிவடைந்தது. நான் நயன்தாராவை என்றென்றும் மன்னிக்க மாட்டேன்.
இதையும் பாருங்க : என் ரெண்டு பசங்கள்ல இவருக்கு இந்தி சுத்தமா புடிக்காது – ஜோதிகா அளித்த பேட்டி.
இந்த மாதிரி பெண்களெல்லாம் கைது செய்ய சொல்ல வேண்டும் என்று கோபத்துடன் கூறினார். மேலும்,பிரபுதேவா எப்போதும் தன்னுடைய குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொது இடங்களில் பேசுவதில்லை. ஆனால், அவரது மனைவியும் அப்படி இருப்பார் என்று சொல்ல முடியாதல்லவா என்றும் பலரும் கூறி வருகிறார்கள். இப்படி இவர் கூறியிருப்பதை பார்த்து பலர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து உள்ளார்கள்.