சமீபத்தில் வெளியான தன் படத்தின் முழு சம்பளத்தையும் திருப்பி கொடுத்துள்ள பிரபுதேவா. இப்படி ஒரு காரணமா ?

0
522
prabhudeva
- Advertisement -

கொரியன் படத்திற்கு சரியான உரிமை பெறாத காரணத்தால் தேள் படத்தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கொடுத்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இயக்குனர் ஹரி குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் தேள். இந்த படம் இயக்குனர் ஹரிகுமார் அடிப்படையில் ஒரு நடன இயக்குனர். இவர் பல படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். தற்போது அவர் பிரபுதேவாவை வைத்து இயக்கிய முதல் படம் தான் தேள். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தில் பிரபு தேவா, சம்யுக்தா ஹெக்டே, ஈஸ்வரி ராவ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

சத்யா இசை அமைத்துள்ளார் மற்றும் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வட்டிக்கு பணம் கொடுத்து வியாபாரிகளிடம் கொள்ளையடித்து வருகிறது ஒரு கும்பல். அந்த கும்பலில் அடிதடி வேலையாக செய்கிறார் பிரபுதேவா. தனது தாயை மதிக்காமல் அடிதடியில் ஈடுபட்டு வரும் பிரபுதேவா திடீரென்று திருந்தி தன் தாயுடன் சேர்ந்து வாழ்கிறார். ஆனால், பிரபுதேவா பாதிக்கப்பட்ட நபர்கள் அவரை பழிவாங்க வருகின்றார்கள்.

- Advertisement -

தேள் படத்தின் கதை:

ஒருகட்டத்தில் பிரபுதேவாவுக்கு என்ன நடக்கிறது? பிரபுதேவா அடி தடியை விட்டு தன் தாயுடன் சேர்ந்து வாழ்கிறாரா? என்பதுதான் படத்தின் மீதி கதை. இந்த படம் ஆக்ஷன் பாணியில் உருவாகி இருக்கிறது. கடன் பிரச்சினையால் கஷ்டப்படுகிற பல குடும்பங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பணத்தேவைக்காக குடும்பத்தில் ஒருவரை இழந்து தவிக்கும் உறவுகள். அவர்களது வலி, வேதனை என அனைத்தையும் படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்படவில்லை.

தேள் படம் கொரியன் படத்தின் தழுவல்:

இந்நிலையில் தேள் கொரியன் படம் என்பதும், உரிமை வாங்காததால் கோடி கணக்கில் நஷ்ட ஈடு கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேள் படம் முடிவடைந்த நிலையில் தான் கொரியாவில் வெளியான ‘Pieta’ என்ற திரைப்படத்தின் தழுவல் என்பது தயாரிப்பாளருக்கு தெரிய வந்தது. பின் உலக அளவில் பிரபலமான கிம் கி தக் இயக்கிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பாலிவுட்டின் பிரபல நிறுவனம் உரிமை வாங்கி இருந்தது. இந்நிலையில் தமிழில் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

தேள் பட தயாரிப்பாளர் மீது புகார்:

அதனால் தமிழ் தயாரிப்பாளர் தாங்கள் உரிமை வாங்கி வைத்திருக்கும் கொரியன் திரைப்படத்தின் தழுவல் என்பதை அறிந்தும் வெளியிட்டு இருக்கிறார்கள். இதனால் நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் கேட்டுள்ளார் பாலிவுட்டின் பிரபல நிறுவனம். மேலும், தேள் திரைப்படத்தின் காட்சிகள் கொரியன் படத்தின் சாயல் இல்லாமல் மாற்ற முயற்சி செய்தனர் படக்குழுவினர். ஆனால், ஏற்கனவே படம் முழுமையாக எடுக்கப்பட்டதால் படம் மாற்றியமைப்பதற்கு சாத்தியமில்லாமல் போனது. பின் வேறு வழியில்லாமல் தேள் படத்தின் தயாரிப்பாளர் ஒரு கோடிக்கும் அதிகமான தொகையை நஷ்ட ஈடாக கொடுத்துள்ளார். இது தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டம் என்று சொல்லலாம்.

கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்த தேள் படம் தயாரிப்பாளர்:

அதுமட்டுமில்லாமல் இந்த படம் வெளிவந்து பெரிய அளவில் வசூலிக்கவில்லை. அதோடு இந்த படம் வெளியே வந்ததே பல பேருக்கு தெரியாது என்றே சொல்லலாம். இந்த சூழ்நிலையில் பிரபுதேவா தன்னுடைய சம்பளத்தை பெருமளவு விட்டுக் கொடுத்ததாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. மேலும், இந்த தேள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறவில்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு தழுவல் உரிமை பெறாத காரணத்தினால் பெரும் தொகையை நஷ்ட ஈடாக தர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர் மன வேதனையில் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement