பல ஆண்டு கழித்து நயனுடன் பணிபுரிய இருக்கும் பிரபுதேவா – (பிரபுதேவா இரண்டாம் மனைவி ஒன்னும் சொல்லலையா ? )

0
388
prabhudeva
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகை நயன்தாரா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. சமீபகாலமாகவே இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கு சினிமாவின் உச்ச நடிகையாக நயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் இருக்கிறார். தன் காதலன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து நயன்தாரா படங்களை தயாரித்து இருக்கிறார். நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன், சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார்.

- Advertisement -

காத்துவாக்குல ரெண்டு காதல் படம்:

இவர்களின் திருமணம் எப்போது ?என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருக்கும் ஒரு விஷயம். மேலும், இவர்கள் இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் கிரிக்கெட் பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி- நயன்தாரா- விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகி இருக்கும் படம் காத்துவாக்குல 2 காதல்.

காட் ஃபாதர் படம்:

இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் கடந்த வாரம் வெளியாகி இருந்தது. இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. மேலும், பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து கனெக்ட், லயன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நயன் அவர்கள் காட் ஃபாதர் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஜெயம் ராஜா இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

நயன்தாரா ரோல் குறித்த தகவல்:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நயன் நடிக்கிறார். இந்த படத்தில் கௌரவ வேடத்தில் சல்மான் நடித்து நடித்து இருக்கிறார். இப்படம் மலையாளத்தில் வெளியான லூசிஃபர் படத்தின் ரீமேக் ஆகும். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த பிரியதர்ஷினி கதாபாத்திரத்தில் தான் நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடன இயக்குனராக பிரபு தேவா கமிட்டாகியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

நயன்-பிரபுதேவா கூட்டணி:

இந்த படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு நடன இயக்குனராக பிரபுதேவா பணியாற்றி இருக்கிறார். இதன் மூலம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபுதேவா மற்றும் நயன்தாரா ஒரே படத்தில் பணியாற்றி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவாவுடன் நயன்தாரா அவர்கள் காதலில் இருந்து திருமணம் செய்து கொண்டு பின் பிரேக் அப் ஆனது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து படத்தில் பணிபுரியும் தகவல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இது குறித்து பல சர்ச்சைகள் இருந்தது.

Advertisement