‘உங்களுக்கு தான் அவர் ஐஸ்வர்யா, எனக்கு எப்போதும் அவர்’ – பிரபுதேவா வெளியிட்ட வீடியோ

0
563
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு இரு மகள்கள் உள்ளார்கள். இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவரும் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் தனுசை காதலித்து 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும், தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹாலிவுட், பாலிவுட்டிலும் கால்த்தடத்தை பதித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Aishwarya

மேலும், இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இருவரும் பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருப்பது சமூக பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. 18 ஆண்டு திருமண வாழ்வில் இருந்து இருவரும் பிரிவதாக கூறி இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர பேசும் பொருளாக உள்ளது. தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். அதோடு தனுஷ்- ஐஸ்வர்யா இருவருக்கும் நடுவில் என்ன தனுஷ்- என்று தெரியாமல் பல விதமாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

- Advertisement -

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து:

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து அறிவித்ததில் இருந்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் அவர்களை சேர்த்து வைக்க பல முயற்சிகள் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று இருவருக்கும் அட்வைஸ் செய்து வருகின்றனர். மேலும், பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தனுஷ் நடிக்கும் படங்கள்:

தற்போது தனுஷின் மாறன் திரைப்படம் வெளியாகி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் தனுஷ் தி கிரேட் மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய பல படங்களில் கமிட்டாகி தனுஷ் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் ஐஸ்வர்யாவும் மியூசிக் ஆல்பத்தை இயக்கி வருகிறார். இந்த மியூசிக் ஆல்பத்தை ஐதராபாத்தில் தான் ஐஸ்வர்யா இயக்கி வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முஸாஃபிர் என்ற பாடலை இயக்கி வருகிறார். சமீபத்தில் தான் அந்தப் பாடலின் போஸ்டர் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா ஆல்பம் ப்ரமோவில் வந்தது:

மேலும், இந்த ஆல்பம் பாடல் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதோடு இந்த பாடல் ப்ரோமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் ப்ரோமோவில் வரும் ஸ்கூட்டரை பார்த்த நெட்டிசன்கள், அது விஐபி தனுஷ் வண்டி போல இருக்கிறது என்று கமெண்ட் செய்திருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் தனுசை விவாகரத்து செய்ய இருந்தாலும் ஐஸ்வர்யா இன்னும் அவரை மறக்கவில்லை என்றும் விமர்சித்தார்கள்.

பிரபுதேவா பதிவிட்ட வீடியோ:

இந்த நிலையில் நடிகர் பிரபுதேவா, ஐஸ்வர்யாவை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ஹை பப்பு, உங்களுக்கு எல்லாம் தான் ஐஸ்வர்யா. எனக்கு எப்போதுமே பப்பு. 9 வருடங்கள் கழித்து ஒரு சிங்கிள் உருவாக்கியிருக்கிறார். இப்போதெல்லாம் சிங்கிள் தான் ட்ரெண்ட். அதுவும் அவர் நான்கு மொழிகளில் வெளியிடுகிறார். பப்பு ரொம்ப choosy. அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்ள மாட்டார். அப்படிப்பட்ட அவர் பண்றாங்க என்றால் கண்டிப்பாக சூப்பர் ஆகத்தான் இருக்கும். டெக்னீசியன்கள் எல்லாமே பெரிய பெரிய ஆட்கள். அதனால் பாடல் சூப்பராக இருக்கும், என்னுடைய வாழ்த்துக்கள் என்று பிரபுதேவா கூறியிருக்கிறார். இப்படி பிரபுதேவா கூறியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement