சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது அவர் இயக்கிய முதல் குறும்படத்தை யூடுயூபில் பலர் தேடி சென்று பார்த்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லவ் டுடே.
இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.படத்தில் சத்யராஜின் மகளாக இவானா நடித்திருக்கிறார்.
லவ் டுடே படத்தின் கதை :
ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்து இருக்கிறார். இவானா- பிரதீப் ரங்கநாதன் இருவரும் காதலிக்கிறார்கள். இதை இரு வீட்டிலும் சொல்ல நினைக்கிறார்கள். அப்போது இவானாவின் அப்பா சத்யராஜை காண பிரதீப் ரங்கநாதன் வருகிறார். அவரிடம் தங்களுடைய காதலை பற்றி பேசுகிறார் பிரதீப். உடனே சத்யராஜ் இருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார்.அதாவது, நீங்கள் இருவரும் உண்மை காதலர்கள் என்றால் நீங்கள் இருவரும் ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுடைய செல்போன்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.
பின் இருவரும் அந்த நிபந்தனையை ஒற்றுக் கொண்டு செல்போன்களை மாற்றிக் கொள்கிறார்கள். அந்த ஒரு நாள் கதை தான் படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைகிறது. இதனால் காதலர்கள் இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.இதையெல்லாம் சமாளித்து இந்த காதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இன்றைய கால காதல் எப்படி இருக்கிறது? என்பதை தெளிவாக படத்தில் காண்பித்து இருக்கிறார் இயக்குனர். இந்த படம் முதல் நாளே நல்ல விமர்சங்களை பெற்று வருகிறது.
குவியும் Postive விமர்சனங்கள் :
இந்த படம் முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்கள் கூட இந்த படத்திற்க்கு நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிரதீப் ரங்கநாதன் முதல் முதலில் இயக்கிய குறும்படம் ஒன்றை ரசிகர்கள் பலரும் தேடி பார்த்து வருகின்றனர். கோமாளி திரைப்படத்திற்கு முன்பே இயக்குனர் பிரதீப் ‘App Lock’ என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார்.
App Lock குறும்படம் :
அந்த குறும்படத்தின் Exted Version தான் இந்த ‘லவ் டுடே’ திரைப்படம். ‘app lock’ குறும்படத்திலும் நாயகனாக பிரதீப் தான் நடித்து இருந்தார். மேலும், அதில் சத்யராஜ் கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ் நடித்து இருப்பார். ஆனால், அந்த குறும்படத்தில் செல் போனை மாற்றிய பின்னர் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என்பதை காண்பிக்காமல் நாரடியாக இருவரும் பிரிவது போல காண்பித்து இருப்பார் பிரதீப்.