சிம்புவின் VTV படத்தில் நடித்த பிரபலம் திடீர் மரணம் – ரசிகர்கள் கடும் அதிர்ச்சி.

0
580
vinnaithandi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சிம்பு அவர்கள் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் சிம்புவின் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இன்று காலமாகி உள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவை வைரலாகி வருகிறது. இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தில் சிலம்பரசன், திரிஷா, கணேஷ் ஜனார்த்தன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படம் சிம்புவின் திரைப்பயணத்திற்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது என்று சொல்லலாம்.

- Advertisement -

கோட்டயம் பிரதீப் பற்றிய தகவல்:

இந்நிலையில் இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கோட்டயம் பிரதீப். ஆனால், இவர் இதற்கு முன்பு மலையாள திரை உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர். இவர் கோட்டயத்தில் பிறந்தவர். இதனால் தான் இவருடைய பெயரை கோட்டயம் பிரதீப் என்று அழைக்கிறார்கள். இவர் 2001 ஆம் ஆண்டு தனது 40 வயதில் தான் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை இவர் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பிரபல மலையாள இயக்குனர் ஐ.வி.சசி இயக்கிய ‘ஈ நாடு இன்னலே வரே’ என்ற படத்தின் மூலம் தான் கோட்டயம் பிரதீப் நடிகராக அறிமுகமானார்.

கோட்டயம் பிரதீப் நடித்த படங்கள்:

ஆரம்ப காலகட்டத்தில் இவர் படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக தான் நடித்தார். பின் தன்னுடைய கடும் உழைப்பினால் சினிமா உலகில் பெயர் சொல்லும் அளவிற்கு கோட்டயம் பிரதீப் உயர்ந்தார். பின் இவர் ராஜமாணிக்யாம், 2 ஹரிஹர், ஆடு ஒரு பகீரா ஜீவி ஆனு, ஒரு வக்கன் செல்ஃபி, லைஃப் ஆஃப் ஜோசுட்டி, குஞ்சிராமாயணம், வெல்கம் டூ செண்ட்ரல் ஜெயில், அமர் அக்பர் அந்தோனி, அடி கப்யாரே கூட்டாமணி, கட்டப்பணையிலே ரித்விக் ரோஷன் போன்ற பல படங்களில் இவருடைய நடிப்பு பெரிதும் மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

-விளம்பரம்-

கோட்டயம் பிரதீப் திரைப்பயணம்:

மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் பரஸ்பரம் என்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார். இவர் மலையாள திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேல் நடித்திருக்கிறார். பின் தமிழில் இவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவுக்கு மாமாவாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் ராஜா ராணி, தெறி, நண்பேண்டா, கொஞ்சம் கொஞ்சம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்தார்.

கோட்டயம் பிரதீப் இறப்பு:

இப்படி சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகர் கோட்டயம் பிரதீப் இன்று காலை மாரடைப்பால் இறந்து உள்ளார். தற்போது இவருக்கு 61 வயதாகிறது. இவருக்கு மாயா என்ற மனைவியும், விஷ்ணு சிவா என்ற மகனும், விண்டா என்ற மகளும் உள்ளார்கள். இவருடைய மறைவை அடுத்து மலையாள திரையுலகம் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமா உலகில் உள்ள பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள். சோசியல் மீடியாவில் இவருடைய புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement