உன்ன கூப்டு பாராட்டுன மனுஷனுக்கு நீ பண்ற நன்றி கடன் இதானா – பிரதீப் செய்த செயலால் கடுப்பான ரசிகர்கள்.

0
723
pradeep
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் தற்போது இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகிஇருந்த படம் லவ் டுடே. இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள்நடித்து இருந்தனர்.

-விளம்பரம்-

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்கள் கூட இந்த படத்திற்க்கு நல்ல விமர்சனங்களை கொடுத்துவந்தனர். இந்த படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்திஇருந்தது. மேலும், இந்த படம் தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் பிரதீப் உடைய பழைய டீவ்ட்டுகள் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பிஇருந்தது.

- Advertisement -

பிரதீப் ரங்கநாதன் பழைய டீவ்ட்:

இவர் 2011 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை விமர்சித்து டீவ்ட் போட்டு இருந்தார். அதேபோல் 2014 ஆம் ஆண்டு விஜய்யின் ஜில்லா படத்தை விமர்சித்து பதிவிட்டு இருந்தார். பின் லவ் டுடே படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை குறித்தும் இவர் மோசமாக விமர்சித்து பதிவு போட்டுஇருந்தார். இதை எல்லாம் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாக்கி வந்தனர்.

ரஜினியின் பாராட்டு :

இதனால் பல ட்ரோல்களை சந்தித்து வரும் பிரதீப்பிற்கு ரஜினியிடம் இருந்து வந்த பாராட்டு பெரும் ஆறுதலாய் அமைந்தது. சமீபத்தில் இந்த படத்தை பார்த்துள்ள ரஜினி, பிரதீப்பை போனில் தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறது. அது போக பிரதீப்பை நேரில் அழைத்து அவரை பாராட்டி இருக்கிறார். ரஜினியை சந்தித்த போது எடுத்த அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பகத்தில் பகிர்ந்து இருந்தார் பிரதீப்.

-விளம்பரம்-

பிரதீப் விளக்கம் :

இந்நிலையில் இது குறித்து பிரதீப் ரங்கநாதன் அவர்கள்விளக்கம் ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் அவர், அதிகம் பரவி வரும் பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை.ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் பேஸ்புக் கணக்கு ரீஆக்டிவேட் செய்யப்பட்டது. விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபமில்லை. அதற்கு பதிலாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதை காட்டியதற்காக அவர்களுக்கு நன்றி. சில பதிவுகள் உண்மையானவை.

ரஜினி ரசிகர்கள் குறித்த கேலி :

ஆனால், Cuss Words கொண்டிருக்கும் பதிவுகள் போலியானவை. நான் தவறு செய்து விட்டேன். வயதுக்கேற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக் கொள்கிறோம். நான் அதை சரி செய்து முயற்சித்தேன். நான் இன்னும் ஒவ்வொரு நாளும் சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ரஜினி ரசிகர்களை கேலி செய்யும் வகையில் ட்வீட் ஒன்றை பிரதீப் லைக் செய்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மீண்டும் சர்ச்சையில் பிரதீப் :

இப்படி ஒரு நிலையில் அஜித் Troll பக்கம் ஒன்றில் ரஜினி ‘ஜாய்ண்ட் ஜெகதீசன்’ என்ற படத்தில் நடிப்பது போல சில fan Made போஸ்டர்கள் பதிவிடப்பட்டு இருந்தது. அதில் இந்த படத்திற்காக மெண்டல்ஸ் எல்லாம் அவளுமடன் காத்துகொண்டு இருக்கின்றனர். விரைவில் எடுக்கங்கள் பிரதீப் என்று பிரதீப்பை டேக் செய்து இருந்தண்ட். இப்படி ரஜினி ரசிகர்களை பைத்தியங்கள் என்று குறிப்பிட்டு இருக்கும் இந்த ஒரு பதிவை பிரதீப் லைக் செய்து இருக்கிறார்.

அந்த ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து ரஜினி ரசிகர் பலரும் பிரதீப்பை திட்டி தீர்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ரஜினி ரசிகர் ஒருவர் ‘அந்த மனுஷன் உன்ன கூப்பிட்டு பாராட்டி மனசார வாழ்த்தினார்.அவருக்கு நீ பண்ணுற நன்றி கடன் அவரை பத்தி போட்ட troll போஸ்ட் ku like mmm இதெல்லாம் என்ன ஒரு கேவலமான பிறப்போ தெரியல பிரதீப் என்று திட்டி தீர்த்து இருக்கிறார்.

Advertisement