தளபதிய ஏன் மென்ஷன் பண்ணல – விஜய்68 படத்திற்கு வாழ்த்து சொன்ன பிரதீப்பை கேள்வி கேட்ட ரசிகர். அவரின் பதிலை பாருங்க.

0
2651
Vijay68
- Advertisement -

விஜய் 68 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருந்த நிலையில் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து லவ் டுடே இயக்குனர் போட்ட பதிவு தற்போது சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் தற்போது இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் லவ் டுடே. இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

- Advertisement -

இந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது. மேலும், இந்த படம் ஹிட் அடித்த உடன் பிரதீப் போட்ட பழைய ட்விட்டர் பதிவுகள் எல்லாம் வைரலாந்து. இவர் 2011 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை விமர்சித்து டீவ்ட் போட்டு இருந்தார். அதேபோல் 2014 ஆம் ஆண்டு விஜய்யின் ஜில்லா படத்தை விமர்சித்து பதிவிட்டு இருந்தார். பின் லவ் டுடே படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை குறித்தும் இவர் மோசமாக விமர்சித்து பதிவு போட்டு இருந்தார்.

மேலும், விஜய்யை கேலி செய்துவிட்டு அவர் நடித்த படத்தின் தலைப்பையே வைத்து இருந்தது பெரும் கேலிக்கு உள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இரு நிலையில் விஜய் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இவர் போட்ட பதிவு மீண்டும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருக்கிறது. பீஸ்ட் படத்தின் மாபெரும் தோல்வியை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய், லியோ படத்தின் மூலம் லோகேஷ் கனகிராஜுடன் கோர்த்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே விஜய்யின் 68வது படத்தை தெலுங்கு இயக்குனர் இயக்கப்போவதாக தகவல் பரவியது. இந்த நிலையில் விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கப்போவதாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

AGS நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமிக்கிறார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இயக்குனர் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் அர்ச்சனா, வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரை டேக் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர் ‘நான் தளபதியுடன் படம் பண்ணும் மொத்த குழுவுவிற்கும் வாழ்த்துக்களை கூறி இருக்கிறேன். ஏன் தளபதிய மென்ஷன் பண்ணல என்று கேள்வி எழுப்பியதற்கு, தயவு செய்து நடுவில் உள்ள வரிகளை மட்டும் படிக்க வேண்டாம்’ என்று பதில் அளித்துள்ளார்

Advertisement