வாழை படத்தை பார்த்துவிட்டு நடிகர் பிரதீப் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் மூலம் உலகில் அறிமுகம் ஆனார். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்து இருந்தது. அதை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ போன்ற எல்லா படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்து வெளியாகி இருக்கும் படம் ‘வாழை’. இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனி மலர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
வாழை படம்:
மாரி செல்வராஜ் இளம் வயதிலிருந்து சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. அதோடு கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் வாழை படம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலருமே மாரி செல்வராஜை நேரில் சந்தித்து பாராட்டி வருகிறார்கள்.

பிரபலங்கள் பாராட்டு:
அதுமட்டுமில்லாமல் சில பிரபலங்கள் சோசியல் மீடியாவிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த இயக்குனர் பாலா, மாரி செல்வராஜை கட்டியணைத்து ஆனந்த கண்ணீரில் முத்தமிட்டார். அவரை தொடர்ந்து சிவகார்த்திகேயன், ரஞ்சித், வெற்றிமாறன், மணிரத்தினம், சூரி உட்பட பலரும் வாழை படத்தை பாராட்டினார்கள். இப்படி பிரபலங்கள் பாராட்டி வரும் வீடியோவை மாரி செல்வராஜ் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.
பிரதீப் வீடியோ:
அந்த வகையில் இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் வாழை படத்தை பார்த்து பாராட்டி பேசியிருக்கும் வீடியோவை தான் தற்போது மாரி செல்வராஜ் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் பிரதீப், வாழை படம் பார்க்க பார்க்க மாரி செல்வராஜ் மீது மரியாதை அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்த கதை அவருடைய வாழ்க்கையில் நடந்தது என்று நினைக்கும் போது இவர் எங்கிருந்து, எங்கே வந்துள்ளார்? என்று வியப்பாக இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=IFzx_a4fdrw
படம் குறித்து சொன்னது:
படம் பார்க்கும்போது, அந்த மாதிரியான இடத்தில் இருந்து எப்படி மாரி செல்வராஜ் சினிமாவுக்குள் வந்தார் என்பதை பற்றி தான் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அவரை பற்றி பேச வார்த்தைகள் வரவில்லை. அந்தளவிற்கு சினிமாவைக் கற்றுக் கொண்டு அவர் வாழ்க்கையில் நடந்ததை காட்சிப்படுத்தியிருக்கிறார். இந்த படம் இன்னும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.






