விஜய் டிவியில் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தான் கோலாகலமாக முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வந்தார். மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இதில் முதல் இடத்தை பிக் பாஸ் டைட்டில் பட்டத்தையும் திவ்யா கணேஷ் பெற்றிருக்கிறார். இரண்டாவது இடத்தை சபரி, மூன்றாவது இடத்தை விக்ரம், நான்காவது இடத்தை அரோரா பெற்றிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனேயே டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் கோயில் குளம் என்று ஆன்மீகத்தில் இறங்கி விட்டார்.
பிக் பாஸ் 9:
மேலும், நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு வாங்கிக் கொண்டு வெளியே போன கம்ருதீன், பார்வதி இருவருமே ஃபேன் மீட் என்று பிஸியாக இருக்கிறார்கள். சில போட்டியாளர்கள் குரூப் குரூப்பாக ஈவன்ட், டூர் என்று ரவுண்டு கட்டி வருகிறார்கள். ஆனால், இன்னும் சிலர் மட்டும் சண்டை சர்ச்சை என்று இருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரம்யா ஜோ தன்னுடைய சோசியல் மீடியாவில் பிரஜன் அனுப்பிய வாய்ஸ் நோட் ஒன்றை பதிவிட்டு உடனே டெலிட் செய்திருக்கிறார்.

ரம்யா ஜோ வாய்ஸ் நோட்ஸ்:
அந்த வாய்ஸ் நோட்டில் சான்ட்ராவிடம் பணத்தை எடுக்க சொல்லி ஏற்கனவே நான் சொன்னதை சொல்ல வேண்டாம். எதுவுமே சொல்ல வேண்டாம். அவங்க கேமை அவங்களே பார்த்துக்கட்டும் என்று பேசி இருந்தார்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ரம்யா ஜோ மீண்டும் அந்த வீட்டிற்குள் போவதற்கு முன்பு பிரஜன் அனுப்பி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக பிரஜன் கூறியிருந்தது, பிக் பாஸ் முடிந்தே ஒரு மாதம் ஆகிவிட்டது. இப்போது என்னுடைய அடுத்த படமான ஊருக்கு ரெண்டு ஊதாரி படத்தினுடைய பூஜை போட்டு விட்டோம்.

ப்ரஜன் பேட்டி:
இனியும் அந்த நிகழ்ச்சியில் நடந்த பஞ்சாயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கணுமா? எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. அதனால இந்த மாதிரி பஞ்சாயத்துகளை பற்றி பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. நிறைய நேரம் இருக்கிறவர்கள் இந்த மாதிரி ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள். அதனால் இதை கடந்து அதாவது கண்டுக்காமல் போறதுதான் நல்லது என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார்.






