குழந்தை பிறந்து சாப்பாடு இல்லாம கஷ்டப்பட்ட போது அவர் தான் உதவி செய்தார் – வேதனையுடன் கூறிய சாண்ட்ரா.

0
530
- Advertisement -

சமைக்க அரிசி கூட இல்லாமல் இரட்டை குழந்தைகளை வைத்து ரொம்ப கஷ்டப்பட்டோம் என்று சாண்ட்ரா- பிரஜின் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். அதோடு சினிமாவை போலவே பல்வேறு சின்னத்திரை நடிகர் நடிகைகள் திருமணம் செய்துள்ளார்கள். சேத்தன் – தேவதர்ஷினி , ஸ்ரீகுமார் – ஷமிதா , சஞ்சீவ் – ப்ரீத்தி, போஸ் வெங்கட்- சோனியா சமீபத்தில் சஞ்சீவ் – ஆல்யா மானஸா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம்.

-விளம்பரம்-

அந்த வரிசையில் சீரியலில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் லைப் ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் பிரபல சின்னத்திரை ஜோடிகளான பிரஜின்-சாண்ட்ரா. கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாண்ட்ரா. இவர் தனது பயணத்தை மலையாள படங்களில் குழந்தை நட்சித்திரமாக நடித்து துவங்கினார். பின் தமிழில் 2000 ஆண்டு வெளிவந்த , “கண்ணுக்குள் நிலவு ” என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதை அடுத்து 2009 ஆம் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்த போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார் சாண்ட்ரா.

- Advertisement -

சாண்ட்ரா- பிரஜின் திருமணம்:

அதன் பின்னர் இவர் பல்வேறு சீரியல்கலில் நடித்து இருக்கிறார். அதன் மூலம் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் இவர் சிங்கம் 3, உறுமீன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவருக்கு சினிமாவில் சரியான வரவேற்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர் சின்னத்திரை சீரியல் பக்கம் வந்து விட்டார். இதனிடையே இவர் சன் மியூசிகில் பிரபல தொகுப்பாளராக இருந்த ப்ரஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் இவர் தொலைக்காட்ச்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

சாண்ட்ரா- பிரஜின் குழந்தை :

அதேப்போல் ப்ரஜின் சின்னத்திரை சீரியல் நடிகர் தான். இவர் காதலிக்க நேரமில்லை, சின்னத்தம்பி, அன்புடன் குஷி, வைதேகி காத்திருந்தாள் போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் வெள்ளி திரையிலும் ஹீரோ, குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். ஆனால், இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேலும், இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து தான் சான்ட்ரா கர்ப்பமாக இருந்தார். பின் இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.
தற்போது இருவருமே தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-

சாண்ட்ரா- பிரஜின் பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் சாண்ட்ரா- பிரஜின் இருவரும் சேர்ந்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்கள். அதில் அவர், திருமணத்துக்குப் பிறகு நாங்கள் இருவரும் ரொம்பவே கஷ்டப்பட்டோம். ஆனால், அதைப்பற்றி யாரிடமும் சொல்ல மாட்டோம். நாங்கள் காதலிக்கும் போது எங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். அவர்தான் எங்களுக்கு ஒரு மூட்டை அரிசி எடுத்து தந்தார். அதேபோல் எங்களுக்கு குழந்தை பிறந்த சமயத்தில் கூட நாங்கள் ரொம்ப கஷ்டப்பட்டோம். எங்களுடைய குழந்தைகளை நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து தான் கஷ்டப்பட்டு வளர்த்தோம்.

வாழ்க்கை குறித்து சொன்னது:

எங்களுக்கு யாருமே உதவி செய்யவில்லை.நான் கஷ்டப்படுகிறேன் என்று பிரஜின் இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து குழந்தைகளை பார்த்துக் கொள்வார். அடுத்த நாள் சூட்டிங் போகும்போதெல்லாம் டிராபிகில் எல்லாம் தூங்கிடுவார் என்று அவருடைய அசிஸ்டன்ட் சொல்லுவாங்க. அதற்குப் பிறகு தான் நான் அவரிடம் எதுவுமே சொல்றது இல்லை. நானே குழந்தைகளை முடிந்த வரைக்கும் பார்த்துக் கொள்வேன். எங்கள் இரண்டு பேருக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்ததால் தான் எங்களுடைய கஷ்டமான காலத்தை கடந்து வந்தோம் என்று கூறியிருந்தார்.

Advertisement