தனது ட்வின்ஸ் மகள்களுக்கு கோவிலில் அன்னப்பிரஷன் துவங்கிய பிரஜின் – சாண்ட்ரா. அப்படினா என்ன தெரியுமா ? (10 ஆண்டு தவமாச்சே)

0
8582
prajin
- Advertisement -

சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். மேலும், சினிமாவை போலவே பல்வேறு சின்னத்திரை நடிகர் நடிகைகள் திருமணம் செய்துள்ளார்கள். சேத்தன் – தேவதர்ஷினி , ஸ்ரீகுமார் – ஷமிதா , , சஞ்சீவ் – ப்ரீத்தி, போஸ் வெங்கட், சோனியா சமீபத்தில் சஞ்சீவ் – ஆல்யா மானஸா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம் அந்த வகையில் சீரியலில் ரீல் ஜோடியாக இருந்து தற்போது ரியல் லைப் ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் பிரபல சின்னத்திரை ஜோடிகளான பிரஜின்-சாண்ட்ரா.

-விளம்பரம்-

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல தமிழ் சீரியல்கள் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாண்ட்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான வரும் ‘சின்னத்தம்பி’ சீரியலின் மூலம் பிரபலமான பிரஜனை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருக்கும் சான்ரா ஏன் இத்தனை காலமா குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதற்குகடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருக்கமுடன் பதிலளித்த சான்ட்ரா.

இதையும் பாருங்க : ஈசன் படத்தில் ஓம குச்சி வந்த பையன ஞாபகம் இருக்கா ? – வேற லெவல் Transformation. பாத்தா அசந்திடுவீங்க.

- Advertisement -

அதற்கு முக்கிய காரணமே நான் ஒரு குழுந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டது தான். அது எங்கள் தோழி ஒருவரின் குழந்தை படுபாவிங்க அந்த கொழந்தையை எங்க குழந்தையா ஆகிட்டாங்க. அதே போல 10 வருடம் ஏன் குழந்தை பெத்துக்களனு கேக்குறாங்க என்று மிகவும் உருக்கமுடன் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், எங்களிடம் பல பேர் இது தான் உங்கள் முதல் குழந்தையா என்று கேட்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த சான்ட்ராவிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இரட்டை குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிரஜின்-சான்ட்ரா தம்பதியினரின் அழகிய இரட்டை தேவதைககளுக்கு கோவிலில் அன்னபிரஷன் விழாவை கொண்டாடியுள்ளனர். அப்படி என்றால் பிறந்ததில் இருந்து பாலை மட்டும் குடித்து வரும் குழந்தைக்கு முதன் முறையாக உணவை கொடுப்பது தான்.

-விளம்பரம்-
Advertisement