பாலியல் குற்றவாளிகளுக்கு மாலையும் வாழ்த்தும் – உச்ச கட்ட கோபத்தில் பாஜகவை வெளுத்து வாங்கிய பிரகாஷ் ராஜ்

0
404
siddharth
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இயக்குனர் கே.பாலச்சந்தரால் ‘டூயட்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். பின் தனது நடிப்பால் குறுகிய நாட்களிலேயே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் மிரட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமைக்காக தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி இருக்கிறார். பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார். அதிலும் சமீப காலமாக பிரகாஷ் ராஜ் அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

- Advertisement -

பிரகாஷ்ராஜின் திரைப்பயணம்:

தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் விருமன். இந்த படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்து இருக்கிறார். இந்தப் படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்று வருகிறது.

பிரகாஷ்ராஜின் அரசியல்:

இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ் ராஜ் அவர்கள் நடிப்பைத் தாண்டி அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமூக நலன் சார்ந்த பணிகள் என பல பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் அரசியல் குறித்தும், பிரதமர் மோடி குறித்தும், மத்திய ஆளும் பாஜக அரசு குறித்தும் பிரகாஷ்ராஜ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவை கடுமையாக சாடி உள்ள பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

விடுதலையான குற்றவாளிகள்:

அதாவது, கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானோ என்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அவருடைய மூன்று வயது குழந்தையை கொலை செய்து இருந்தார்கள். இந்த வழக்கில் 11 குற்றவாளிகள் கைதாகி சிறையில் இருந்தார்கள். சமீபத்தில்தான் அந்த 11 குற்றவாளிகளை அரசு விடுவித்து இருந்தது. இதனையடுத்து பாஜக எம்.எல்.ஏ சி.கே ராவுல்ஜி, அந்த 11 பேரும் குற்றம் செய்தார்களா? என்று எனக்கு தெரியாது. சிறையில் அவர்கள் நன்னடத்தை உடன் இருந்தனர். அவர்கள் பிராமணர்கள், நன்மதிப்பு கொண்டவர்கள், யார் எனும் தவறான எண்ணத்தில் பழி சுமத்தி இருக்கலாம் என்று கூறியிருந்தார்.

பிரகாஷ் ராஜ் டீவ்ட்:

இவருடைய இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாலியல் குற்ற வழக்கில் சிக்கி விடுதலையான 11 பேரின் புகைப்படத்தை பதிவிட்டு, தலைவர்கள் தங்கப் பதக்கம் வென்றவர்கள். வாழ்த்துவதில் மும்முரம் காட்டும் போது அவர்களை சேர்ந்தவர்கள் பாலியல் குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வாழ்த்தி வருகின்றனர் என்று பதிவிட்டிருக்கிறார்.

சித்தார்த் :

இப்படி பிரகாஷ்ராஜ் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதே போல நடிகர் சித்தார்த்தும் இந்த விவகாரம் குறித்து தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள கருத்தில் ‘பாலியல் குற்றவாளி மிருகங்களை விடுவித்து மலர் தூவி வரவேற்றுள்ளனர். 75 ஆண்டு ஆகிவிட்டது, ஆனால் அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பற்றவர்கள் என்று கூற யாருக்கும் அனுமதி இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement