நடிகர் பிரகாஷ் ராஜ் நில ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று வருமானவரித்துறை அதிகாரிகள் கொடுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட்ட கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்த கூட்டத்தில் அந்த பகுதியில் வாழும் விவசாய மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை வருவாய் கோட்டாட்சியர் இடம் கூறியிருக்கிறார்கள்.
அப்போது அவர்கள் பேத்துப்பாறை பகுதி ஊர் தலைவர் மகேந்திரன், நடிகர் பிரகாஷ்ராஜ், பாபி சிம்மா மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பது, கிட்டத்தட்ட 15 வருடமாக நாங்கள் இருக்கும் பகுதியில் சாலைகள் போடவில்லை. கடந்த மே ஒன்றாம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் சாலை அமைக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானம் நிறைவேற்றினோம். அதன் பிறகு அந்த இடத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பகுதியில் பிரகாஷ்ராஜ் கட்டி வரும் கட்டிடத்திற்கு உரிய அனுமதியும் இல்லை.
மக்கள் கொடுத்த புகார்:
அது மட்டும் இல்லாமல் இந்த இடத்தில் கனரக வாகனங்களை பயன்படுத்தி இருக்கிறார். மேலும், அவர் பொதுசாலையில் சிமெண்ட் சாலை அமைத்திருக்கிறார். அதோடு நடிகர் பிரகாஷ் 7 ஏக்கர் நிலத்தையும் அருகில் உள்ள சதுப்பு நிலத்தையும் தன்னுடைய பெயருக்கு ஆக்கிரமித்து இருக்கிறார். அதற்கு பிரகாஷ்ராஜ் பணம் கொடுத்ததாக சொல்கிறார். அதேபோல் நடிகர் பாபி சிம்ஹாவும் அரசாங்க நிலத்தில் மூன்று மாடி கட்டிடம் கட்டி வருகிறார்.
நடிகர்கள் இடம் ஆக்கிரமிப்பு:
மலை கிராம விவசாயிகள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமித்து அப்பகுதியில் செல்லும் விவசாயி இடம் தவறாக நடந்து கொள்கிறார்கள். இது குறித்து கேட்டால் ஒருமையில் பேசி திட்டுகிறார்கள். அந்த இடத்தை ஒரு லட்சம், இரண்டு லட்சத்திற்கு விற்பதாக இருக்கிறார்கள். மேலும், கட்டிடம் கட்டும் இடத்திற்கு எதிர்ப்புறமான இடத்தில் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடத்தை தோன்றுகின்றார்கள். இதில் ஏதோ முறைகேடு நடக்கிறது என்று மட்டும் எங்களுக்கு புரிகிறது. அனுமதியில்லாமல் இவர்கள் அரசாங்கத்தில் நடந்து கொள்வது தவறான ஒன்று.
அரசாங்கம் நடவடிக்கை:
இதற்கு அரசாங்கம் தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியிருக்கிறார்கள். தற்போது இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது . இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர், நில அளவை அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்மா கட்டி வரும் கட்டிடங்களை ஆய்வு செய்து இருக்கின்றனர். இந்த இரண்டு கட்டிடங்களும் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு இருப்பதாக வில்பட்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்து இருக்கிறார். இதனை அடுத்து நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவிற்கு நோட்டீஸ் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
வருமானத்துறை அதிகாரிகள் விளக்கம்:
இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் தரப்பில் அதிகாரிகள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதில் கொடைக்கானல் அஞ்சு வீடு பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் எந்த ஒரு நில ஆக்கிரமிப்பும் செய்யவில்லை. பிரகாஷ்ராஜ் பெயரில் 7 ஏக்கர் நிலம் இருப்பது உண்மை. அது பட்டாவுடன் இருக்கிறது. அதில் எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லை என்று வருமானவரி துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பொதுப் பாதையை மக்கள் பயன்படுத்த தடையும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.