மோடியை விமர்சித்து நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் மோடிக்கு குடும்பம் இல்லை என்று பொது கூட்டத்தில் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரசாத் யாதவ் கூறியிருக்கும் கருத்து தான் சர்ச்சையாகி இருக்கிறது. அதோடு அவர் மோடியை கிண்டல் கேலியும் செய்து இருந்தார்.
இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து, பிரசாத் யாதவை விமர்சித்தும் வருகிறார்கள். மேலும், இது தொடர்பாக சென்னையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் மோடிக்கு குடும்பம் கிடையாது என்று என்னை திட்ட, வசைபாட ஒரு புதிய திட்டத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால் தான் இப்படி பேசுகிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கு 16 வயதாகும்போதே நான் என்னுடைய வீட்டை திறந்து விட்டு வெளி வந்து விட்டேன்.
மோடி குறித்த விமர்சனம்:
இந்த தேசத்திற்காக தான் நான் வெளியேறினேன். நீங்கள் தான் என்னுடைய குடும்பம். பாரத நாட்டின் மக்கள் தான் என்னுடைய குடும்பம். தேசத்தின் உடைய இளைஞர்கள் என்னுடைய குடும்ப மக்கள். அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க இரவும் பகலாக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். யாருமே இல்லாதவர்கள், நிர்கதியாக இருப்பவர்கள், அனாதைகள் அனைவருக்குமே இந்த மோடிக்கு சொந்தமானவர்கள்.
மோடி பேட்டி:
என்னுடைய பாரதமே என்னுடைய குடும்பம் என்றெல்லாம் பேசி இருந்தார். இப்படி இவர் பேசியிருந்தது மிகப்பெரிய அளவில் வைரலாக்கப்பட்டது. இதை எடுத்து பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எல்லோரும் மோடியின் குடும்பம் என்று தங்களுடைய சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டு மோடிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் வழக்கம்போல் மோடியை விமர்சித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
பிரகாஷ்ராஜ் பதிவு:
அதில் அவர், டியர் சுப்ரீம் லீடர் (மோடி) மணிப்பூர், விவசாயிகள், வேலைவாய்ப்பின்மை ஆகிய மக்கள் உங்களுடைய குடும்பதைச் சேர்ந்தவர்கள்தானா? என்று கேட்டிருக்கிறார். இப்படி பிரகாஷ்ராஜ் போட்டிருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.
பிரகாஷ்ராஜ் குறித்த தகவல்:
இவர் தனது நடிப்பால் குறுகிய நாட்களிலேயே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார். இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், இவர் சமீப காலமாகவே பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இது குறித்து பல சர்ச்சைகள் எழுப்பி இருக்கிறது.