கொரோனா பாதிப்பு. நான் சேர்த்து வைத்த பணம். இன்னும் செய்வேன் – பிரகாஷ்ராஜுக்கு குவியும் பாராட்டு.

0
61646
prakashraj
- Advertisement -

கொரோனா வைரஸினால் உலகமே தம்பித்து போய் உள்ளது. உலகம் முழுவதும் யுத்தத்தை விட பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது இந்த கொரோனா வைரஸ் . சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தொடங்கிய இந்த கொரோனா தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-விளம்பரம்-

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். இந்தியாவில் இதுவரை 10 பேர் இறந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கொரோனா வைரஸ் பரவல் காரணத்தினால் படப்பிடிப்புகள் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னுடைய பணியாளர்களுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் முன்கூட்டியே சம்பளம் கொடுத்து உள்ளார். இதனால் இவருக்கு சோசியல் மீடியாவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பது, நான் சேர்த்து வைத்த பணம் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தேன்.

Image result for prakash raj

-விளம்பரம்-

எனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டுப் பணியாளர்கள் என அனைவருக்கும் மே மாதம் வரைக்கும் சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்து விட்டேன். இந்த கொரோனா வைரஸ் காரணமாக நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களிலும் சம்பந்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்கு குறைந்தது அரை சம்பளத்தை தர தேவையான வழிமுறைகளை செய்து வருகிறேன். இறுதி வந்துட்டேன் இன்னும் முடியவில்லை.

என்னால் முடிந்த வரை நான் செய்வேன். உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நீங்களும் உங்களால் முடிந்தவரை செய்யுங்கள் என்று இந்த தருணத்தில் நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க்கைக்கு நாம் திரும்ப தர வேண்டிய நேரமிது. ஒருவருடன் ஒருவர் ஆதரவாக நிற்க வேண்டிய தருணம். அனைவரும் ஒன்றாக இருந்து இந்த கொரோனா வைரஸ் எனும் உயிர்க் கொள்ளியை எதிர்த்து போராடுவோம் என்று கூறியிருந்தார்.

மேலும், தமிழ் சினிமாவில் கடந்த 19ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் திருச்சியில் பணியாற்றும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தினக்கூலி ஊழியர்களுக்கு வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகுமாரின் குடும்பத்தினர் 10 லட்சமும், சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனாவினால் அதிகம் பாதிப்படைந்தது இத்தாலி நாடு என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நோய்த்தொற்று உள்ளவர்களும், வெளிநாடு சென்று வந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement