சந்திரயான்-3 குறித்து கேலி, பிரகாஷ் ராஜின் இந்திய அடையாளங்கள் பறிக்க படவேண்டும் என பரபரப்பு புகார்.

0
2843
PrakashRaj
- Advertisement -

பிரகாஷ்ராஜ் இந்தியனாக இருக்க தகுதி இல்லை, கைது செய்யுங்கள் என்று முத்துரமேசு நாடார் சங்க தலைவர் அளித்து இருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

-விளம்பரம்-

இவர் தனது நடிப்பால் குறுகிய நாட்களிலேயே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார். அதிலும், சமீப காலமாக பிரகாஷ் ராஜ் அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அரசியலில் பிரகாஷ் ராஜ்:

மேலும், இவர் சமீப காலமாகவே பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இது குறித்து பல சர்ச்சைகள் எழுப்பி இருக்கிறது. இந்த நிலையில் சந்திரயான்-3 விண்கலம் குறித்து பிரகாஷ் ராஜ் போட்ட டீவ்ட் தான் தற்போது இந்தியா முழுவதும் பேசும் பொருளாக இருக்கிறது. அதாவது, நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா செலுத்தி இருக்கிறது. இந்த விண்கலம் நாளை மறுதினம் நிலவில் தரையிறங்க இருக்கிறது.

சந்திராயன் 3 :

இதுமட்டும் நடந்து விட்டால் இந்தியா செய்த மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படும். ஆனால், இது குறித்து பிரகாஷ் ராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், டீ ஆத்துவதுபோல் ஒருபடத்தை பதிவிட்டு, ”விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து எடுத்த முதல் படம்” என்று கூறி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கொந்தளித்து போய் கடுமையாக பிரகாஷ்ராஜை விமர்சித்து வருகிறார்கள். அதில் சிலர், சந்திரயான்-3 ஒட்டுமொத்த இந்தியாவிற்கான பெருமை. அரசியல் நோக்கத்தில் அவமரியாதை செய்யக்கூடாது.

-விளம்பரம்-

பிரகாஷ் ராஜ் மீது புகார் :

டிரோல் செய்யும்போது அரசியலுக்கும், நாட்டிற்கும் இடையிலான எல்லையை தெரிந்து கொள்ளுங்கள் என்றும், ஒருவரை வெறுப்பதற்கும், நாட்டை வெறுப்பதற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. உங்களுடைய இந்த கருத்தை பார்ப்பதற்கு கவலயைாக உள்ளது என்றும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேசு மற்றும் தமிழ்நாடு நாடர் சங்க நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரகாஷ்ராஜ் மீது புகார் அளித்து இருக்கிறார்கள் அதில் அவர்கள், பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் விக்கிரம லேண்டர் எடுத்த புகைப்படம் என்று பதிவிட்ட கேலிச்சித்திரம் இந்திய விஞ்ஞானிகளை கிண்டல் செய்யும் விதமாக இருக்கின்றது.

இந்திய அடையாளங்கள் பறிக்க படவேண்டும் :

அதனால தான் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். இதனை அடுத்து நாடார் சங்க தலைவர் முத்துரமேசு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், பிரகாஷ் ராஜ் வெளியிட்ட புகைப்படம் இந்திய மக்கள், விஞ்ஞானிகள், இஸ்ரோ தலைவர் அனைவரையும் கிண்டல் செய்யும் விதமாக இருந்தது. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். பிரகாஷ்ராஜின் இந்திய அரசால் வழங்கபட்ட அனைத்து அடையாளங்களையும் இந்திய அரசு பரித்துகொள்ளவெண்டும். அவர் இந்தியர் என்பதற்கு தகுதியற்றவர் என்று கூறி இருக்கிறார்.

Advertisement