“ஆஸ்கார் இல்ல பாஸ்கர் கூட கிடையாது” உங்களுக்கு – பதான் படத்தை விமர்சித்தவர்களை கிண்டல் செய்த பிரகாஷ் ராஜ்.

0
710
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரகாஷ் ராஜ் “பதான்” படத்தை பற்றி பதிவு ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு “பதான்” படத்தை எதிர்த்தவர்களை கிண்டல் செய்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. மேலும், இவர் இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

பதான் படம் :

இதனை அடுத்து ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பதான். இந்த படத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கிறார். சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

காவி உடை சர்ச்சை :

ஆனால் இப்படத்தின் பாடல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான போது பலவிதமான சர்ச்சைகளில் பதான் படமானது சிக்கியது. ஓன்று கவர்ச்சி மற்றொருன்று நடிகை தீபிகா படுகோன் அணிந்திருந்த உடை. அதாவது கடந்த வருடம் வெளியான பேஷாராம் ரங் என்ற பாடலில் நடிகை தீபிகா படு கவர்ச்சியாக நடித்திருந்தார். இதனால் இது சமுதாயத்திற்கு சீர்கேடு என்ற குற்றசாட்டு எழுந்தது. அதோடு தீபிகா காவி நிற ஆடை அணிந்திருந்தால் இது இந்துத்துவ உணர்வுகளை புண்படுத்துகிறது என்று குற்றசாட்டு எழுப்பப்பட்டது.

ஆதரித்த பிரகாஷ் ராஜ் :

மேலும் பதான் படம் வெளியாவதற்கு கடும் எதிர்ப்புகளை பாஜாகாவினரும், இந்து அமைப்புகளும் வைத்தனர் அதோடு பல இடங்களில் படம் வெளியிடுவதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. ஆனாலும் பல ரசிகர்களும், சினிமா நட்சத்திரங்களும் தாங்களாக முன்வந்து “பதான்” படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அப்படி ஆதரவு தெரிவித்தவர்களில் ஒருவர் தென்னித்திய சினிமா பிரபலமான பிரகாஷ் ராஜ். இவர் இந்த எதிர்ப்புகளுக்கு தன்னுடைய கருத்தையும் தெரிவித்திருந்தார். மேலும் தீபிகா படுகோன் கால்பந்து கோப்பையை ஏந்தியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உலக கோப்பையை தீபிகா பகிர்ந்த்தால் இதனையும் மறுத்து விடுவீர்களா என்று கேட்டிருந்தார்.

-விளம்பரம்-

காரி துப்புகின்றனர் :

மேலும் படம் வெளியாகி இப்போது 700கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வரும் நிலையில் தான் மீண்டும் பிரகாஷ் ராஜ் ஒரு கருத்தை கூறியுள்ளார். அதாவது “பதான் படத்தை எதிர்த்தவர்கள் பிரதமர் மோடியின் படத்திற்கு 30 கோடி கூட அவர்களால் வசூல் செய்ய முடியவில்லை. காஷ்மீர் பைப்ஸ் என்கிற பிரச்சாரப் படுத்தி எடுத்தார்கள. ஆனால் அந்தப் படத்தை பார்த்துவிட்டு சர்வதேச கலைஞர் காரி துப்பும் அளவிற்கு இருக்கிறது.

ஆஸ்கார் ஏன் இல்லை :

இதில் பாடத்தை இயக்கிய இயக்குனர் ஆஸ்கார் விருதை ஏன் தரவில்லை என்று கேட்டார்? ஆஸ்கார் இல்லை பாஸ்கர் விருது கூட உங்களுக்கு கிடையாது என்று கிண்டல் செய்துள்ளார் பிரகாஷ் ராஜ். மேலும் இதற்கு முன்னர் கூட பதான் படத்தை எதிர்த்த நபர்கள் குறைக்கத்தான் செய்வார்கள் கடிக்க மாட்டார்கள் என்று கூறிய நிலையில், மீண்டும் பிரகாஷ் ராஜ் பதான் படத்தை எதிர்த்தவர்களை கிண்டல் செய்த்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

Advertisement