மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குனர் மீது நடிகை கொடுத்திருக்கும் மீடு புகார் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம் கடந்த 22 ஆம் தேதி தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். படத்தில் கேரளாவில் மஞ்சுமெல் பாய்ஸ் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றார்கள். அங்கு குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கி கொள்கிறார். அவருடன் வந்த நண்பர்கள் எப்படி அவரை காப்பாற்றுகிறார்கள் என்பதை படத்தின் கதை. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது.

Advertisement

மஞ்சுமெல் பாய்ஸ் படம்:

சொல்லப்போனால், மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று வருகிறது. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க கொடைக்கானலில் உள்ள பகுதிகளில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்த படம் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. நடிகர் கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்து பிரபலமான படங்களில் ஒன்று குணா. நீண்ட இடைவெளிக்கு பின் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை இடம்பெற்றிருக்கிறது.

படம் குறித்த தகவல்:

பிரபலங்கள் பலருமே இந்த படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் கமலஹாசனை படத்தின் இயக்குனர் சிதம்பரம் மற்றும் பட குழுவினர் நேரில் சந்தித்து அவரிடம் வாழ்த்துக்களை பெற்று போட்டோ எடுத்திருக்கிறார்கள். பின் படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மஞ்சுமோல் பாய்ஸ் பட இயக்குனரின் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் சர்ச்சையாகி இருக்கிறது.

Advertisement

இயக்குனர் குறித்த சர்ச்சை:

அதாவது சோசியல் மீடியாவில் பிரபலமாக இருப்பவர் பிராப்தி எலிசபத். இவரை இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் மேலான ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள். மேலும், மஞ்சுமேல் பாய்ஸ் என பெயர் வைப்பது ஏன்? மஞ்சுமேல் கேர்ள்ஸ் என இருக்க கூடாதா? என்று நெட்டிசன் ஒருவன் போஸ்ட் போட்டிருந்தார். இதை பார்த்த பிராப்தி எலிசபத் சில கமெண்ட்ஸ்களை எல்லாம் போட்டு இருந்தார். பின் அவர், அந்த இயக்குனர் பற்றியும் அவருடைய ஆண் நண்பர்கள் பற்றியும் நான் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அப்பப்பா… என்று போட்டிருந்தார்.

Advertisement

பிராப்தி எலிசபத் சுமத்திய குற்றச்சாட்டு:

இதை பார்த்த நெட்டிசன்கள் பதில் கொடுத்து வந்தார்கள். அதோடு பிராப்தி எலிசபத் பதிவு பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. காரணம், மஞ்சுமேல் பாய்ஸ் படத்தை இயக்குவதற்கு முன்பு சிதம்பரம் அவர்கள் சில படங்களை இயக்கி இருந்தார். அதில் ஒன்றுதான் ஜான்.ஈ.மான். இந்த படத்தில் பிராப்தி எலிசபத் நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இதன் பின் தான் இவர் இயக்குனர் சிதம்பரம் மீது பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சை எழுப்பி இருக்கிறார். ஆனால், இது குறித்து இயக்குனர் தரப்பில் இருந்து எந்த பதிலுமே வரவில்லை.

Advertisement