உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் சம்மந்தபட்ட அனைவருக்கும் அபராதம் விதிக்கிறாங்க – eb பில்லை பார்த்து ஷாக்கான பிரசன்னா பட இயக்குனர்.

0
1089
prasanna
- Advertisement -

கடந்த இரண்டு நாட்களாக நடிகர் பிரசன்னா Vs தமிழ் நாடு மின்வாரியதிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் ஒரு புறம் சற்று வைரலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்குகிறார்கள். இந்நிலையில் கோடைகாலம் காரணமாகவும், கொரோனா பரவல் காரணமாகவும் மக்கள் வீட்டிலேயே இருப்பதால் மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் பிரசன்னா அவர்கள் மின்சார வாரியம் குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், இந்த கொரோனா லாக்டவுனில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. இதை உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்? எனப் பதிவிட்டிருந்தார். பிரசன்னாவின் இந்த டீவீட்டுக்கு பதில் அளித்த நெட்டிசன்கள். தங்களுக்கும் இம்மாதம் அதிக மின் கட்டணம் வந்ததாக கூறிவந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் பிரசன்னாவின் குற்றசாட்டிற்கு மின்சார துறை பதில் அளித்ததோடு பிரசன்னாவிற்கு கண்டமும் தெரிவித்துள்ளது. மேலும், நடிகர் பிரசன்னா, மார்ச் மாதத்தர்கான ரூ. 13,528 மின்கட்டணத்தை நடிகர் பிரசன்னா செலுத்தவில்லை என்றும் கூறியிருந்தார்கள். மேலும், மின் வாரியத்தை கடுமையான வார்த்தைகளில் குறை சொன்னதால் அதற்கு கண்டமும் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து பிரசன்னா தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் பிரசன்னாவை வைத்து அச்சமுண்டு அச்சமுண்டு, கல்யாண சமையல் சாதம் போன்ற படங்களை இயக்கிய அருண் வைத்யநாதன், தனக்கும் 10000 ரூபாய் மின் கட்டணம் வந்ததை கண்டு ஷாக் அடைந்ததாகவும், எனக்கு தெரிந்து நீங்கள் இந்த விஷயத்தை நீங்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நாளில் இருந்து உங்களுக்கு சம்மந்தபட்ட அனைவருக்கும் இப்படி அபராதம் விதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement