வைரலாகும் சிவகார்த்திகேயன் பிரசன்னா மீம்..!கிண்டல் செய்த ரசிகர்களுக்கு பிரசன்னாவின் பதில்..!

0
349
Shivakarthikean

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபாரமானது. சாதாரண மேடை கலைஞசராக தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் தொகுப்பாளராக மாறி தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக விளங்கி வருகிறார்.

Prasanna meme

தற்போது சிவகார்த்திகேயனையும் நடிகர் பிரசனாவையும் இணைத்து சமூக வலைத்தளத்தில் ஒரு மீம் வைரலாகபரவி வந்தது. சன் லைஃப் டிவியில் ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் பிரசன்னா. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் அவர்தான் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் ஶ்ரீனிவாசன் என்பவர், “பிரசன்னா தொகுத்து வழங்குவது போரடிக்கிறது. அவர் சுமாரான நடிகர். இன்னும் அதிக வெற்றிகளை அவர் பெறவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன் சிறந்த என்டர்டெயினர்” என்று கூறியுள்ளார்.

அவருக்குப் பதிலளித்த பிரசன்னா, “டியர் ஶ்ரீனி, தொகுத்து வழங்குவது என் முழு நேர வேலை இல்லை. நான் சுமாரான நடிகர் என்றால், அதை மேம்படுத்திக்கொள்கிறேன். இன்னும் வெற்றியைப் பெறவில்லை என்றால் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது என நினைக்கிறேன். ஒருநாள் உங்களின் அன்பையும் பெறுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.