தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு ரியல் லைப் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ரஜினி – லதா, அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் குயூட் தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் சினேகா பிரசன்னா ஜோடி. தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் சினேகா. தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என்று பல டாப் நடிகர்களுடன் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சினேகா இடையில் கொஞ்சம் படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டார். 2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் தான் இணைந்தார். பின் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.
2020ல் பிறந்த மகள் :
சினேகா-பிரசன்னா இருவரும் இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிநேகாவிற்கு பெண் குழந்தை பிறந்து. இருந்தது . இந்த செய்தியை ஒரு வித்யாசமான புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் பிரசன்னா ‘தை மகள் பிறந்தாள்’ என்று பதிவிட்டு இருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் குட்டி ஸ்னேகா பிறந்து விட்டார் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
மகன் பெயர் மகளுக்கு :
இது ஒரு புறம் இருக்க தங்களது மகளுக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளதாக நடிகர் பிரசன்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டோம். அதனால் நாங்கள் ஆத்யா என்ற பெயரை வைக்கலாம் என்று யோசித்தோம். ஆனால். ,முதல் குழந்தை ஆண் குழந்தையாக போய்விட்டது. தற்போது என் மகளுக்கு அந்த பெயரை தாண்டி வேறு எந்த பெயரையும் யோசிக்க தோணவில்லை.
சினேகா மகள் ஆத்யந்தா :
எனவே, கொஞ்சம் வித்யாசமாக ஆத்யந்தா என்று வைத்துளோம். அப்படி என்றால் ‘ஆதியும் அந்தமும் அற்றவள்’என்று அர்த்தம் என்று கூறி இருந்தார் பிரசன்னா. அதே போல அடிக்கடி தனது குடும்பத்துடன் இருக்கும் புகைடபங்களை ஸ்னேகா பிரசன்னா இருவரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தன் மகளுக்கு காது குத்தை நடத்தி இருந்தனர்.
மகளின் இரண்டாம் பிறந்தநாள் :
அதே போல சமீபத்தில் பொங்கல் பண்டிகையை தன் குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டார். இப்படி ஒரு நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சினேகா மகள் மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடினார். மகளின் பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாட வைத்த பிரசன்னா – சினேகா. அங்கு உள்ள குழந்தைகளுக்கு தங்கள் மகள் கையால் புத்தாடை கொடுத்ததும், அவர்களுடன் கேக் வெட்டி, விளையாடவும் செய்து தனது மகளுக்கு ஒரு சிறந்த பெற்றோராக இருந்து இருக்கின்றனர்.