மணிவண்ணன் நினைவு தினம் : அவர் இறந்ததால் பாதியில் நின்ற பிரசாந்தின் பிராம்மாண்ட படம். இதோ பிரசாந்தின் பதிவு.

0
742
manivannan
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் உதவி இயக்குனராக அடி எடுத்து வைத்து பின் பல வெற்றிப்படங்களை இயக்கி வெற்றி கண்டது மட்டுமில்லாமல் ஒரு நடிகராகவும் புகழ் பெற்றவர் நடிகர் மணிவண்ணன். மணிவண்ணன் அவர்கள் சினிமா திரை உலகில் நடிகர், இயக்குனர் ஆக மட்டும் இல்லாமல் தமிழ் உணர்வாளர் ஆகவும் பங்காற்றியுள்ளார். இவர் தமிழில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகராக நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் 50 திரைப்படங்களை அவரே இயக்கியும் உள்ளார்.மணிவண்ணன் நடிகர் சத்யராஜின் கல்லூரி நண்பரும் ஆவார். அதனாலே மணிவண்ணன் சத்யராஜை வைத்து 25 படங்கள் எடுத்துள்ளார்.

-விளம்பரம்-
LAST RESPECT TO MANIVANNAN SATHYARAJ SEEMAN AMEER VIKRAMAN PART 1 -  BEHINDWOODS.COM - YouTube

மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும் ,ரகுவண்ணன் மகனும்,ஜோதி என்ற மகளும் உள்ளார்கள். இந்நிலையில் மணிவண்ணனுக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சையும், முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையும் செய்து உள்ளார்கள். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமலும், நடிக்காமலும் சினிமா துறையில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு ஓய்வுபெற்றார். நடிகர் மணிவண்ணன் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதுகு வலிப்பதாக கூறி இருந்தார்.

- Advertisement -

சோகத்தை தாங்காத மனைவி :

பின்னர் என்ன? நடந்தது என்று தெரியவில்லை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் போட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். நடிகர் மணிவண்ணனின் மனைவி செங்கமலத்தால் அவருடைய கணவர் மரணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.மேலும், இவர் தன்னுடைய கணவனின் இறப்பினை குறித்து ஒவ்வொரு நாளும் அழுது அழுது புலம்பி இருந்துள்ளார்.மேலும், மணிவண்ணன் இறந்து சரியாக இரண்டு மாதங்கள் கூட இருந்திருக்காது மணிவண்ணன் மனைவி செங்கமலம் தன்னுடைய உயிரிழந்தார்.

9 ஆம் ஆண்டு நினைவு நாள் :

இன்று மணிவண்ணன் இறந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படி ஒரு நிலையில் மணிவண்ணன் இறப்பால் நின்று போன படம் குறித்து நடிகர் பிரசாந்த் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 90 காலகட்டத்தில் டாப் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் பிரசாந்த். தொடர்ந்து உச்சத்தில் இருந்த இவர் பின்னர் திருமணத்தால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமா பெரும் சறுக்கலை சந்தித்தார்.

-விளம்பரம்-

டாப் ஸ்டார் பிரசாந்த் :

2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் கிட்டத்தட்ட 4 ஆண்டிகளுக்கு மேல் எந்த படத்திலும் பிரசாந்த் நடிக்கவில்லை. பின்னர் 2011 ஆம் ஆண்டு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து இழந்த தன் இடத்தை பிடிக்க போராடினார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் ராஜ் கபூர் இயக்கத்தில் ‘என்ன விலை அழகே’ என்ற படத்தில் கமிட் ஆனார். இந்த படத்தில் விஜய்யின் புதிய கீதை படத்தில் நடித்த பாலிவுட் நடிகை அமீஷா படேல் நாயகியாக கமிட் ஆனார்.

கைவிடப்பட்ட பிரம்மாண்ட படம் :

மேலும் இந்த படத்தில் மணிவண்ணன், விஜயகுமார், ராகுவரன், சுகுமாரி, செந்தில், பொன்னம்பலம் என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தனர். நாயகிக்கு சில தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாகவும். ரகுவரன், மணிவண்ணன் போன்ற நடிகர்களின் திடீர் இறப்பு காரணமாக இந்த படம் கைவிடப்பட்டுள்ளது. மேலும்,இந்த படத்தை மீண்டும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்க முடிவு செய்து விரைவில் எடுப்பதாக 2013 ஆம் ஆண்டு பிரசாந்த் அறிவித்தார். ஆனால், இந்த படம் அப்படியே கைவிடப்பட்டுள்ளது.

Advertisement