அந்தாகனை நம்பி அலுத்துப் போன ரசிகர்கள் – தளபதி 68ல் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த பிரசாந்த்.

0
1093
- Advertisement -

தளபதி 68 படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த் இணைந்துள்ளார் என்ற செய்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்த திரைப்படத்தில் . தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் வெளியாகும் வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி லிஸ்டில் சேர்ந்தது.

-விளம்பரம்-

டாப் ஸ்டார் பிரசாந்த்

தளபதி 68 திரைப்படத்தில் சர்ப்ரைஸ் என்டியாக டாப் ஸ்டார் பிரசாந்த் இணைந்துள்ளார். 90களின் சாக்லேட் பாயாக இருந்து வந்தவர் இவர். இவர் பல ரொமான்டிக் திரைப்படங்களின் அனைத்து மக்களின் மனதை கவர்ந்தவர். பின்பு சினிமாவில் வாய்ப்பு குறையவே சில காலமாக எந்த படத்தில் நடிக்காமல் இருந்து வந்தார். அதன்பின் இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான ஜானி திரைப்படத்தில் நடித்தார். அப்புறம் தொடர்ந்து தற்போது விஜய் உடன் இணைந்துள்ளார் இவர்.

- Advertisement -

தனது முகநூல் பக்கத்தில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய முதல் இருந்து அனைத்து செய்திகளையும் தகவல்களையும் பகிர்ந்து கொண்டு வந்தார் படக்குழுவின் அதிகாரபூர்வ தகவல் வெளியாகுவதற்கு முன்பே தான் அந்த படத்தில் நடிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவியது இந்நிலையில் தளபதி 68-ம் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருக்கின்றது. மேலும் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியான பின்பு தான் தளபதி 68 குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகும் எனவும் வெங்கட் பிரபு கூறி இருந்தார்.

லியோ படம்:

இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் படம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் கதை மற்றும் வசனம் எழுதி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

தளபதி 68-வது படம்:

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தில் விஜய் உடைய காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் தளபதி 68 படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்திற்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தின் பூஜைகள் என்று சென்னையில் நடைபெற்றது. அதின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது இதில் நடிகர் வைபவ் விஜயுடன் இருக்கும் புகைப்படம் ஆகி வருகிறது. விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்து வருகிறார்கள்.

Advertisement