‘கோட்’ படம் குறித்து நடிகர் பிரசாந்த் கொடுத்திருக்கும் அப்டேட் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்து வருகிறது. தற்போது நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கோட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், தாய்லாந்த், ரஷ்யா, அமெரிக்கா போன்ற பல இடங்களில் இந்த படத்தின் உடைய சூட்டிங் நடந்ததாக கூறப்படுகிறது.
கோட் படம்:
பின் ‘கோட்’ படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி கோட் படத்தின் உடைய முதல் பாடல் ‘விசில் போடு’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பின் நடிகர் விஜயின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் இரண்டாவது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த பாடலில் மறைந்த பாடகி பவதாரணி குரலும் வந்திருந்தது.
கோட் பட பாடல்கள்:
பாதாரணியின் குரலை டெக்னாலஜி மூலம் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து, கோட் படத்திலிருந்து வெளியான ‘ஸ்பார்க்’ என்ற மூன்றாவது பாடல் கடும் விமர்சனத்திற்கு உண்டானது. அந்தப் பாடலுக்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை ரசிகர்கள் வறுத்தெடுத்திருந்தனர். அதையெல்லாம் சரி செய்யும் வகையில் சமீபத்தில் கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தது.
கோட் ட்ரெய்லர்:
ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே, நண்பா நண்பிஸ் என்னும் கோரிக்கையோடு விஜய் பாணியில் அமர்க்களப்படுத்தி இருந்தார்கள். ஏற்கனவே கிடைத்த தகவலின் படி இப்படத்தில், விஜய் SATZ ஏஜென்ட் ஆக நடித்திருக்கிறார். மேலும், ட்ரெய்லரில் பிரசாந்த் விஜய்யை அறிமுகப்படுத்தும் வகையில் காட்டி இருந்தார்கள். அதேபோல், மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் படத்தில் வருவது போல் காட்சிகள் உள்ள நிலையில், அவரின் காட்சிகள் எதுவும் ட்ரெய்லரில் இடம்பெறவில்லை.
Topstar Prashanth in Twitter Space talked about #TheGreatestOfAllTime 💥
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 26, 2024
pic.twitter.com/K9X2Ge9JLI
பிரசாந்த் கொடுத்த அப்டேட்:
தற்போது படம் ஓடும் நேரம் குறித்து நடிகர் பிரசாந்த், ‘கோட்’ படம் 179 நிமிடங்கள் ஓடும் முழு நீளப்படம். கிட்டத்தட்ட மூன்று மணி நேர படம். இது முழு நீளப்படமாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்கும். மேலும் , படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரம் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கர்நாடகா மற்றும் கேரளாவில் காலை 7:00 மணிக்கு வெளியாகிறது. ஆனால், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.