பிரபல நடிகர் பிரதாப்பின் மரணத்திற்காக காரணம் குறித்து போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். பிரதாப் போத்தன் ஆகஸ்ட் 13 ,1952 ல் பிறந்தார். இவர் தனது 15 வயதிலேயே தந்தை கொளதிங்கால் போத்தனை இழந்தார்.இவர் தனது பள்ளி படிப்பை ஊட்டியில் உள்ள லவ்டே லாரன்ஸ் பள்ளியில் முடித்தார். அதன் பின்பு பட்ட படிப்புக்காக சென்னையில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்து தனது பட்ட படிப்பையும் முடித்தார். கல்லூரி படிப்பை முடித்து மும்பையில் உள்ள ஒரு விளம்பர நிறுவனத்தில் நகல் எழுதுபவராக தனது வாழ்க்கையை தொடங்கிய பிரதாப் போத்தன். நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டு. ஓர் ஆண்டுக்குப் பிறகு அமலா சத்தியநாத்தை மறுமணம் செய்து கொண்டார். 22 வருட திருமணத்திற்கு பிறகு 2012 இல் இவர்கள் விவாகரத்து செய்தனர்.
இவர்களுக்கு கேயா என்ற மகள் உள்ளார் 1978 ஆம் ஆண்டு இயக்குனர் பரதனின் ஆரவம் திரைப்படத்தில் அறிமுகமானார் தகரம், அரோகணம் , பன்னீர் புஷ்பங்கள், தன்மாத்ரா, 22 பெண் கோட்டயம் மற்றும் பெங்களூர் டேஸ் இந்த படங்கள் அனைத்தும் இவரது பிரபலமான மலையாள திரைப்படங்களாகும் இவர் கடைசியாக மம்முட்டி நடித்த ‘தி பிரைன் ‘ படத்தில் நடித்தார். மோகன்லால் படமான பரோஸ் கார்டியன் ஆஃப் டிகாமாஸ் ட்ரெஷரிலும் இவர் நடித்தார். இவர் மலையாளத்தில் ரிதுபேதம், டெய்சி மற்றும் ஒரு யாத்ரமொழி ஆகிய மூன்று படங்களையும் இயக்கியுள்ளார் .தமிழில் ஜீவா ,வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி மற்றும் லக்கி மேன் படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் பாருங்க : ஹீரோவாக களமிறங்கிய பிக் பாஸ் நிரூப் – ஆடேங்கப்பா படத்தில் மொத்தம் இத்தனை ஹீரோயின்களாம்.
பிராப் போத்தனின் மரணம் இயற்கையா ? தற்கொலையா ? :-
கிரீன் ஆப்பிள் என்ற விளம்பர நிறுவனத்தையும் வைத்திருந்தார். 70 வயதான பிரதாப் போத்தன் இன்று சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே பிரதாப் போத்தன் மிக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், நேற்று இரவு கூட தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்க்கை குறித்தும் மரணம் குறித்தும் விரக்தியான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் ஜார்ஜ் கார்களின் வரிகளை குறிப்பிட்டு “மரணம் நாம் தினமும் எச்சில் விழுங்குவதால் ஏற்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக பதிவிட்ட முகநூல் பதிவு :
அவர் கடைசியாக பதிவிட்ட அந்த பேஸ்புக் பதிவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக டிரன்டாகி வருகிறது. இந்தநிலையில், திரைப்பட நடிகரும், தயாரிப்பாளர்ரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் மறைவு இயற்கையாக நடந்ததா? அல்லது தற்கொலையா ? என சந்தேகங்கள் எழுந்த வண்னெமே உள்ளது.இன்று 15.07.2022 ஆம் தேதி காலை சுமார் 8.00 மணியளவில் சமையல்காரர் மேத்யூ என்பவர் காபி கொடுக்க பிரதாப் போத்தன் படுக்கை அறைக்கு சென்றபோது பிரதாப் போத்தன் சுயநினைவின்றி மெத்தையில் படுத்த நிலையில் இருந்துள்ளார்.
போலீசார் விளக்கம் :
உடனே பிரதாப் போத்தனின் கார் டிரைவர் சுரேஷ் என்பவருக்கு செய்தியை தெரிவித்துள்ளார். பின்பு இருவரும் சேர்ந்து அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அனுப்பியுள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்ததில் பிரதாப் போத்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து சென்றுள்ளனர். இன்னிலையில் பிரதாப் போத்தன் நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டார் என முதல் கட்ட அறிக்கையை வெளியிட்டனர்.
கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி :-
பிரதாப் போத்தன் மறைவிற்கு திரைத்துறையினர் , ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. கமல்ஹாசன் மறைந்த பிரதாப் போத்தன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அது மட்டும் இல்லாமல் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் தீவிர இலக்கிய வாசிப்பையும் கலைப்படங்கள் மீதான ஆர்வத்தையும் தொடர்ந்தவர் நண்பர் பிரதாப் போத்தன். விறு விறுப்பான திரைப்படங்களை வெற்றியோரமாக இயக்குவதும் நிபுணர் என்பதை வெற்றி விழா காலத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கு என் அஞ்சலி என குறிப்பிட்டுள்ளார்.