பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு பிரவீன் காந்தி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி ஒரு வாரம் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். முதல் நாள் நிகழ்ச்சி அமோகமாக தொடங்கி இருந்தது. பின் முதல் நாளே நாமினேஷன் நடைபெற்றது. இதில் வியானா ,ஆதிரை , அப்சரா , பிரவீன் ராஜ் , பிரவீன் காந்தி, திவாகர், கலையரசன் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று இருந்தார்கள்.
நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது.
பிக் பாஸ் 9:
பின் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மூன்றே நாளில் போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருக்கிறார். தவிர்க்க முடியாத காரணங்களால் தான் இவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்று கூறப்பட்டது. பின் கடந்த வாரம் சனி, ஞாயிறு இரண்டு நாட்களில் விஜய் சேதுபதி வந்து போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் வறுத்தெடுத்து இருந்தார். குறிப்பாக கம்ருதீன், பார்வதியால் எதுவுமே பேச முடியவில்லை. இருவரும் செம பல்பு வாங்கி இருந்தார்கள்.

முதல் வாரம் வெளியேறியது:
கடைசியாக முதல் வார எவிக்ஷன் நடந்தது. அதில் திவாகர், கலையரசன் ஆகியோரில் ஒருவர் தான் வெளியேறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், பிரவீன் காந்தி வெளியேறி இருந்தார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளி வரும்போது பிரவீன் காந்தியிடம் போட்டியாளர்கள் பேசினார்கள். ஆனால், அவர் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்திவிட்டு வெளியே வந்தார். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இயக்குனர் பிரவீன் காந்தி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், ஆலுமா டோலுமா பேமஸா? இல்ல அறம் செய்ய விரும்பு பேமஸா? மக்கள் என்டர்டைன்மென்ட் தான் எதிர்பார்க்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=3CJYTwDev2w
பிரவீன் காந்தி பேட்டி:
நான் மெசேஜ் சொல்வதை விரும்புவதில்லை. மக்களுக்கு நான் சொன்னதெல்லாம் மைண்டில் ஏறவில்லை. இன்னும் கொஞ்ச நாள் நான் உள்ளே இருந்திருந்தால் அவர்களுக்கு புரிந்திருக்கும். அதே மாதிரி மக்கள் என்னை வெளியே அனுப்பவில்லை உள்ள நான் அசௌகரியமாக இருந்தது பார்த்து இயற்கை தான் என்னை வெளியே அனுப்பி வைக்கவில்லை. உள்ளே எனக்கு அசவுகரியமாக இருந்ததை பார்த்து இயற்கை தான் அனுப்பி வைத்தது. ஒரு வேலை மறுபடியும் பிக் பாஸ் வீட்டிற்கு கூப்பிட்டார்கள் என்றால் என்னை இரண்டு வாரம் ஃப்ரீயா விட்டுருங்க என்று சொல்லிவிடுவேன். அப்படி மட்டும் விட்டால் நான் இறங்கி பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார்.






