விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 41 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கிறார்கள். சீரியல் நடிகை திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இவர்கள் வீட்டுக்குள் சென்ற உடனே சரவெடியாக வெடித்தது.
பிக் பாஸ் 9:
மேலும், கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியிலிருந்து முதலில் துஷார் வெளியே போனார். இதை அடுத்து யாரும் எதிர்பாராத விதமாக பிரவீன் வெளியேற்றப்பட்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பிரவீன். இவர் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து நன்றாக தான் விளையாடி வந்தார். பின் திடீரென்று கடந்த வாரம் இவர் வெளியேற்றியது பலருக்குமே அதிர்ச்சி தான். பிரவீன் வெளியேற்றியது அன்ஃபார் என்றெல்லாம் மக்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

பிரவீன் பேட்டி:
நிகழ்ச்சியை விட்டு வெளி வரும்போது பிரவீன் ரொம்பவே எமோஷனலாக அழுது பேசி இருந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு பிறகு பிரவீன் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், நம்மை நாமே ரொம்ப குறைவாக போட்டு விட்டோம் என்று தோன்றுகிறது. நமக்கு கெப்பாசிட்டி இருந்தும் ஒழுங்காக பண்ண முடியவில்லை என்று நினைக்கிறேன். நான் மறுபடியும் உள்ளே போனால் பிக் பாஸ் இன்டர்வியூவில் கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன். கண்டிப்பாக டைட்டில் வின்னர் ஆவேன் என்று கூறியிருக்கிறார்.
View this post on Instagram
நிகழ்ச்சி பற்றி சொன்னது:
பின் நிகழ்ச்சியில் ராபிட் ஃபயர் ரவுண்ட் நடைபெற்றது. அதில் பிரவீன் சொன்னது
யார் பிக் பாஸ் வீட்டில் எமோஷனல் கட்டுப்படுத்தி அவர்களுடைய உண்மையான முகத்தை மறைத்துக் கொண்டு இருக்கிறார்கள்- ரம்யா
யார் ரொம்ப நாடகம் ஆடுகிறார் - கனி திரு
பெஸ்ட் என்டர்டைனர் யார் - பார்வதி
யார் டைட்டில் வின்னர் - வியனா என்று கூறியிருக்கிறார்






