பிரசாந்தின் வீழ்ச்சிக்கு அவரோட திருமணம் தான், பிரசாந்த் மாதிரி ஒரு போட்டியாளர் இல்லனு விஜய் அஜித்கே வருத்தம் தான்.

0
605
Prasanth
- Advertisement -

நடிகர் பிரசாந்தின் தோல்விக்கு காரணம் அவருடைய திருமணம் தான் என்று பிரபல இயக்குனர் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் நடிகர் பிரசாந்த். இவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர். இவர் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் வணிகரீதியாக வெற்றி அடைந்து இருக்கிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த வெற்றிப்படம் என்று பார்த்தால் அது வின்னர் தான்.

-விளம்பரம்-

அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் வந்த பல படங்கள் தோல்வி அடைந்து இருக்கிறது. பின் படிப்படியாக இவருடைய மார்க்கெட்டும் சினிமாவில் குறைய தொடங்கியதால் பிரசாந்த் இடம் தெரியாமல் காணாமல் போனார். ஆனால், விஜய் மற்றும் அஜித்திற்கு போட்டியாக பிரசாந்த் வருவார் என்று எதிர்பார்க்கபட்டார். தொடர் தோல்வி படங்களால் தமிழ் சினிமாவில் இருந்து பிரசாந்த் காணாமலே போனார். அதோடு உடல் பருமன் அதிகரித்து ரசிகர்களால் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது அளவுக்கு பிரசாந்த் மாறினார்.

- Advertisement -

பிரசாந்த் திருமணம்:

இடையில் அப்பப்போ தெலுங்கு சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதோடு நடிகர் பிரஷாந்திற்கு சினிமாவில் மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்தியது அவரது திருமண வாழ்க்கை தான். நடிகர் பிரசாந்த்திற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு பிரபல எக்ஸ்போர்ட் தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமி என்கிற பெண்ணை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணமாகி சில ஆண்டுகள் சந்தோசமாக வாழ்ந்து வந்த நடிகர் பிரஷாந்த் மனக்கசப்பு காரணமாக பிரிய ஆரம்பித்தார்கள்.

பிரஷாந்துக்கு ஏற்பட்ட பிரச்சனைகள்:

பின் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமண வாழ்கை தோல்வி அடைந்ததால் நடிகர் பிரஷாந்த் மன உளைச்சலுக்கு ஆளாகி சில வருடங்கள் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். ஒருவழியாக இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்த பிரசாந்த் மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் மோகன் ராஜாவின் படத்தில் தற்போது பிரசாந்த் நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-

பிரசாந்த் நடிக்கும் படம்:

பாலிவுட்டில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் ‘அந்தாதுன்’. இந்த படத்தின் தமிழ் ரீ மேக் உரிமையை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பல கோடி கொடுத்து வாங்கிய நிலையில் இந்த படத்தினை தமிழில் ரீ மேக் செய்ய இருக்கிறார்கள். இந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரசாந்த் தன்னுடைய ஐம்பதாவது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடி இருந்தார். இந்நிலையில் பிரசாந்தின் வீழ்ச்சிக்கு காரணம் இது தான் என்று இயக்குனர் பிரவீன் காந்தி பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், பிரசாந்த் தோல்விக்கு அவருடைய திருமணம் தான் காரணம்.

இயக்குனர் பிரவீன் காந்தி சொன்னது:

8 வருடங்களுக்கு மேலாக அவர் தன்னுடைய குடும்ப பிரச்சினைகளில் சிக்கியிருந்தார். சினிமா வாழ்க்கையே மொத்தமாக தொலைத்து விட்டார். வரதட்சணை கொடுமை கொடுத்ததாக நடிகர் பிரசாந்தின் மீது அவருடைய முன்னாள் மனைவி புகார் கொடுத்து இருந்தார். இதனை அடுத்து பிரசாந்த்தும் அவருடைய முன்னாள் மனைவியின் மீது புகார் அளித்திருந்தார். இந்த பிரச்சனை திரையுலகில் மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பேரதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. இதனால் இவரால் தொடர்ந்து படங்கள் நடிக்க முடியாமல் போனது. இப்படி சொந்த வாழ்க்கை, சினிமா என்று இரண்டிலுமே தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார் என்று கூறியிருந்தார். பிரசாந்தை வைத்து ஜோடி, ஸ்டார் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் தான் பிரவீன் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement