இந்திய அளவில் ட்ரெண்டான கான்ட்ராக்ட்டர் நேசமணி.! வடிவேலு இப்பயும் கிங் தான்.!

0
1108
- Advertisement -

வைகைப்புயல் வடிவேலுவின் காமெடிக்கள் இன்றளவும் பலரும் ரசிக்கும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. வடிவேலு கடந்த சில காலமாக திரைப்படத்தில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் இவரது காமெடி டெம்ப்லட்டுகள் தான் மீம் கிரியேட்டரகளுக்கு் ஒரு பூஸ்ட் என்றும் கூறலாம்.

-விளம்பரம்-
pray-for-neasamani-is-india-trending-in-twitter

வடிவேலு இல்லாத மீம் மற்றும் வீடியோ வேர்சன் இல்லாத மீம் பக்கங்களே கிடையாது. அந்த அளவிற்கு தலைவரின் காமெடி வசனங்கள் தற்போது சமூக வலைத்தளத்தை ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் வடிவேலு நடித்த கதாபாத்திரம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

- Advertisement -

விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான ‘ ப்ரண்ட்ஸ் ’ படத்தில் வடிவேலுவின் காமெடி வசனங்கள் எல்லோமே கல்வெட்டுப் பதிவுகள் மாதிரி ஆகிடுச்சு. அந்தப் படத்தின் காமெடிகளை இப்போதும் எல்லோரும் டிவி-யிலேயும் யூடியூப்லேயும் பார்த்து ரசிக்கிறாங்க.

அந்த வகையில் இன்று #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் இந்திய அளவில் நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கியுள்ளனர். சிவில் இன்ஜினியரிங் லேனர்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் சுத்தியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அது நேசமணி தலையில் விழுந்தது என ஒரு நெட்டிசன் பதிலளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement