-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

‘காலம் கடந்து இந்த விருது கிடைத்தாலும்’ கேப்டனின் பத்ம பூஷன் விருதை நினைவிடத்தில் வைத்து வணங்கிய பிரேமலதா

0
396

பத்மபூஷன் விருதை விஜயகாந்தின் நினைவிடத்தில் வைத்து பிரேமலதா கண்கலந்தி அழுதிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜயகாந்தின் இறப்பு செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருந்தது. விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. இவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் .

-விளம்பரம்-

பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு விஜயகாந்த் குறித்து பல விஷயங்கள் பகிர்ந்து இருந்தார்கள். இதனை அடுத்து விஜயகாந்தின் திருவுருவ படம் திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

விஜயகாந்தின் மறைவு:

இதில் பிரேமலதா மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் பிரேமலதா தன்னுடைய கணவர் விஜயகாந்தின் இறுதி நாட்கள் குறித்து கூறி இருந்தார். அதன் பின் தொண்டர்களை வாழ வைத்து அழகு பார்க்கும் அன்னையாக தான் இனி என்னுடைய வாழ்க்கை இருக்கும். இனி மக்களுக்காக தான் என்னுடைய வாழ்க்கை என்று கூறி இருந்தார். மேலும், விஜயகாந்தின் சமாதியை அவருடைய மனைவி பிரேமலதா கோவிலாக மாற்றி இருக்கிறார்.

விஜயகாந்த் நினைவிடம்:

விஜயகாந்தின் நினைவிடத்திற்கு மக்கள் தொடர்ந்து வந்து வழிபாடு செய்து அஞ்சலி செலுத்தி விட்டு செல்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் வரும் மக்களுக்கு அன்னதானம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜயகாந்தினுடைய பணியை பாராட்டி பத்மபூஷன் விருது வழங்குவதாக சில மாதங்களுக்கு முன் இந்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

விருது வாங்கிய பிரேமலதா:

இதை பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி மர்முவிடம் இருந்து வாங்கி இருக்கிறார். இந்த விருது விழாவில் விஜயகாந்த் உடைய மகன் விஜய பிரபாகரன், மைத்துணரும் தேமுதிக துணை பொது செயலாளர் எல் கே சதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கியதற்கு ரசிகர்கள், தேதிமுக தொண்டர்களும் பலருமே வாழ்த்தி சந்தோசப்பட்டிருந்தார்கள். ஆனால், இந்த விருதை விஜயகாந்த் கையால் வாங்கி இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

பிரேமலதா சொன்னது:

மேலும், பத்மபூஷன் விருதை விஜயகாந்தின் நினைவிடத்தில் வைத்து பிரேமலதா அஞ்சலி செலுத்தி இருக்கிறார். இதை அடுத்து அவர் பத்திரிகையாளரை சந்தித்த பிரேமலதா, விஜயகாந்துக்கு காலம் கடந்து இந்த விருது கிடைத்தாலும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். விருது கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி. டெல்லியில் தமிழ் சங்கம் சார்பாக கேப்டனுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்தார்கள். அந்த விழாவுக்கு அத்தனை பேரும் வந்து உணவருந்தினார்கள் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news